- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோயினாக களமிறங்கும் தெய்வ திருமகள் பேபி சாரா.. அதுவும் இந்த இயக்குனர் படத்தில்!

ஹீரோயினாக களமிறங்கும் தெய்வ திருமகள் பேபி சாரா.. அதுவும் இந்த இயக்குனர் படத்தில்!

- Advertisement -

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் தெய்வ திருமகள். விக்ரம், அனுஷ்கா, சந்தானம், நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படத்தில் அறிமுகமானார் பேபி சாரா. மும்பையை பூர்வீகமாகக் கொண்ட அவர் அந்தப் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

விக்ரம் ஒருபக்கம் குழந்தை மனநிலையோடு அந்தப் படத்தில் ஸ்கோர் செய்ய பேபி சாரா மறுபக்கம் அசால்ட்டாக ஸ்கோர் செய்தார். அந்தப் படத்தின் ஒரு பாடலில் நா. முத்துக்குமார் இப்படி எழுதியிருப்பார், “பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே” என. அதனை உறுதிப்படுத்தும் வகையில் விக்ரமை கேர் செய்யும்படி அவர் நடிப்பை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இது முதல் படமா என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தினார்கள். அதுவும் படத்தின் க்ளைமேக்ஸில் சாராவின் நடிப்பு உச்சம் சென்றது.

- Advertisement -

தெய்வ திருமகள் படத்துக்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான சைவம் படத்தில் நடித்திருந்தார். கொஞ்சம் வளர்ந்த பிறகு அந்தப் படத்தில் நடித்ததால் என்னவோ தனது நடிப்பிலும் பக்குவமான வளர்ச்சியை காட்டியிருந்தார். சைவத்திலும் சாராவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனையடுத்து அவர் நிச்சயம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக வருவார் என ரசிகர்கள் ஆரூடம் கூறினர்.

தொடர்ந்து பல படங்களில் நடிக்காத சாரா அடுத்ததாக சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்தார். அந்தப் படமும் ஹிட்டானது. இருந்தாலும் கிடைத்த கதையில் எல்லாம் நடிக்காமல் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்படி கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2வில் இள வயது நந்தினியாக அட்டகாச நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பொ.செவில் சாராவின் நடிப்பு மட்டுமின்றி அவரது அழகும் அனைவரையும் கவர்ந்தது.

- Advertisement -

அதனையடுத்து சாரா ஹீரோயினாகவே நடிக்கலாம் என்ற குரல்கள் ஆங்காங்கே கேட்க ஆரம்பித்தன. அதன்படி தற்போது சாரா ஹீரோயினாக அறிமுகமாகவிருக்கிறார். அதாவது சாராவை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய ஏ.எல்.விஜய்யே அவரை கதாநாயகியாகவும் அறிமுகப்படுத்தவிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பொன்னியின் செல்வன் 2வில் சாராவை மணிரத்னம் தெய்வீக அழகுடன் காட்சிப்படுத்திவிட்டார். எனவே இனிமேல் அவர் தைரியமாக ஹீரோயினாக நடிக்கலாம். நானே அவரை 2025ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகப்படுத்தவிருக்கிறேன்” என்றார்.

- Advertisement -

சற்று முன்