- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடி இந்த தனுஷ் பட நடிகை தானாம் -...

விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடி இந்த தனுஷ் பட நடிகை தானாம் – படக்குழு சார்பில் வெளியான தகவல்

- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் தனுஷை வைத்து பல வெற்றி படங்களை அடுத்தடுத்து கொடுத்து தென்னிந்திய சினிமாவை தனது இயக்கத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தவர். அவரது நேர்த்தியான அணுகுமுறை மற்றும் இயல்பான கதை ஓட்டம் ரசிகர்கள் மத்தியிலும் அவரது படத்தினை வெற்றி படங்களாக மாற்றின. அதோடு எதார்த்தமான திரை கதையோடு அழுத்தமான காட்சிகளையும் தனது படத்தில் இடம்பெற செய்யும் வெற்றிமாறனுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

அந்த வகையில் வெற்றிமாறனுக்கு என்று தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நகைச்சுவை நடிகராக இருந்த சூரியை வைத்து அவர் இயக்கியிருந்த விடுதலை படத்தின் ஒன்றாம் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டது. இந்த விடுதலை படம் வெளியானதில் இருந்தே அடுத்த பாகம் எப்போது வெளியாகும்? என்பது குறித்த கேள்விகளையே ரசிகர்கள் தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றனர்.

அதோடு சூரி கதாநாயகனாக நடித்திருந்த இந்த விடுதலை படமானது மார்ச் 31-ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதன் காரணமாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சூரி வெளியிட்டிருந்த ஒரு பதிவில் அவர் விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பிற்கு தயாராகும் விதமாக வீடியோ ஒன்றினையும் வெளியிட்டு ஆவலை தூண்டியிருந்தார்.

Manju-Warrier

இதன் காரணமாக இந்த விடுதலை இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்க்கும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் விடுதலை படத்தின் முதலாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் பெரிய அளவில் அவரது காட்சிகள் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதியின் காட்சிகள் நிறையவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் என்ன ரோலில் நடிக்கப் போகிறார்? அவருக்கு ஏதேனும் ஜோடி இருக்கிறதா? என்பது குறித்த கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விடுதலை இரண்டாம் பாகம் குறித்து வெளியான ஒரு லேட்டஸ்ட் தகவலின் பட குழுவின் சார்பில் விஜய் சேதுபதிக்கு ஒரு ஜோடி இருப்பதாகவும், அந்த ஜோடி அசுரன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியார் தான் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் ஒரு படி மேலே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்