- Advertisement -
Homeபொழுதுபோக்குதக் லைப் படத்தை கைவிட்டதற்கு இதுதான் காரணமா... என்ன சொன்னார் ஜெயம் ரவி...

தக் லைப் படத்தை கைவிட்டதற்கு இதுதான் காரணமா… என்ன சொன்னார் ஜெயம் ரவி…

- Advertisement -

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி வெளியாகிறது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹேட்ரிக் வெற்றி கொடுத்த ராஜேஷ் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

 

- Advertisement -

குடும்ப உறவுகளை மையப்படுத்தியும், அக்காள் தம்பிக்கு இடையேயான நேசத்தையும் இந்த திரைப்படம் பேசுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் ராஜேஸை பொறுத்தவரை அவர் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்திற்கு பிறகு பெரிய வெற்றி திரைப்படத்தை கொடுக்கவில்லை.

 

- Advertisement -

ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, மிஸ்டர் லோக்கல், வணக்கம் டா மாப்ள என அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்தன. இப்படியான சூழலில் தான் இந்த திரைப்படம் ராஜேஷிற்கு கம்பேக் கொடுக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஜெயம் ரவிக்கும் கடைசியாக வெளியான அகிலன் இறைவன் மற்றும் சைரன் ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவு வெற்றியை தரவில்லை. இதனால் அவரும் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து இருக்கிறார். பிரதருக்குப் பிறகு அவர் ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

 

இந்தத் திரைப்படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது. அவர் கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி இருக்கும் தக் லைப் திரைப்படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு காட்சிகள் அதிகம் இல்லை என்பதால் அதில் ஜெயம் ரவி நடிக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை நடிகர் முற்றிலுமாக மறுத்து இருக்கிறார்.

 

சில பல காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் இயக்குனராக வேண்டும் என்று ஆளவந்தான் திரைப்படத்தில் உதவியாளராக சேரவில்லை எனவும், கமல்ஹாசனை தூண்டுகோலாக வைத்து தான் திரைத்துறையில் சேர்வதற்கு அந்தப் பணியை மேற்கொண்டதாகவும் ஜெயம் ரவி பேசி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்