- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் மற்றவர்கள் பற்றி எனக்கு கவலையில்லை, என் சந்தோஷமே எனக்கு முக்கியம் - தேசிய...

அந்த விஷயத்தில் மற்றவர்கள் பற்றி எனக்கு கவலையில்லை, என் சந்தோஷமே எனக்கு முக்கியம் – தேசிய விருது நடிகை நித்யா மேனன் சொன்ன அதிரடி ஸ்டேட்மென்ட்

- Advertisement -

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வரும் பல நடிகைகள் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று முன்னணி நடிகையாக பிரபலமடைகின்றனர். சமீபத்தில் மலையாள நடிகை வருகையில் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை நித்யா மேனன் உள்ளிட்டோர் அதில் குறிப்பிடத்தக்க நடிகைகளாக உள்ளனர்.

நித்யா மேனன் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவர் விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்தது பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

- Advertisement -

தமிழில் மாலினி 22 பாளையங்கோட்டை, 24, மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம், ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் நடித்து வரும் ஒரு புதிய படத்தில் நித்யாமேனன் நடிக்கிறார். அத்துடன் தனுஷ் இயக்கும் 52வது படம் இட்லிக்கடை படத்திலும் நித்யாமேனன் நடித்து வருகிறார்.

தனுஷூடன் நித்யாமேனன் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் இடம்பெற்ற தாய்க்கிழவி பாடல் டிரண்டிங் ஆனது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது நித்யாமேனன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே என்ற பாடலில் சிறந்த நடனத்துக்கும் தேசிய விருது கிடைத்தது. திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக பிலிம் பேர் விருதும் நித்யாமேனனுக்கு கிடைத்தது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நித்யா மேனன் அவர் நடிக்கும் படங்களை எப்படி தேர்வு செய்கிறார் என்பதை ரசிகர்களின் மத்தியில் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், நான் தேர்வு செய்யும் கதாபாத்திரம் அனைவராலும் விரும்பப்பட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கதைகளை தேர்ந்தெடுக்க மாட்டேன். அந்த விஷயத்தில் மற்றவர்களின் விருப்பம் என்ன என்று நான் யோசிக்க மாட்டேன்.

படத்தில் அந்த கதாபாத்திரம் எனக்கு மகிழ்ச்சி தந்தால் மட்டுமே அதை நான் தேர்வு செய்வேன். மேலும் அதிக செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் படத்தின் கதை சரியில்லை என்றால், அது போன்ற படங்களில் நான் நடிக்க மாட்டேன். அதற்கு மாறாக சிறிய பட்ஜெட் படத்தில் நல்ல கதாபாத்திரம் இருந்தால் கூட தயங்காமல் நடிப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்