தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு என்கிற சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக அவரது அப்பா டி ராஜேந்தர் இயக்கிய சில படங்களில் நடித்த சிலம்பரசன், பிறகு வாலிபராகி கதாநாயகனாக பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வல்லவன், மன்மதன், ஒஸ்தி. சரவணா, ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு, செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜாவா தான் வருவேன், வானம் உள்ளிட்ட பல படங்களில் சிலம்பரசன் நடித்திருக்கிறார்.
பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் தக்லைப் படத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்திருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. தக்லைப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இதையடுத்து சிலம்பரசன், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது 49வது படத்தில் நடித்திருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடித்தது. இந்த படத்தில் சிலம்பரசன் பல ஆண்டுகளுக்கு முன் அவர் நடித்த படங்களில் இருந்த தோற்றங்களில், பேண்டஸியாக சில கேரக்டர்களில் வர இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சிம்புவின் 49வது படத்தில் நடிகை மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவர் சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்தவர். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் அந்த படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தி கோட் படத்தில் அப்பா விஜய்க்கு சினேகா ஜோடியாக நடித்திருந்த நிலையில், மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் மீனாட்சி செளத்ரிக்கு நடிப்பதற்கான வாய்ப்பு இந்த படத்தில் பெரிய அளவில் கிடைக்கவில்லை. ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டுமே அவர் விஜயுடன் ஆட்டம் போட்டு இருந்தார். மத்தபடி ஒரு காட்சியில் நடிகர் விஜய் அவரை காதலித்து ஏமாற்றி கொலை செய்து விடுவார்.
தி கோட் படத்தில் மீனாட்சி சவுத்ரி நடிப்பு சிறப்பாக இருந்தும், அவருக்கு அதிக அளவில் நடிப்பதற்கு இயக்குனர் வெங்கட்பிரபு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் சிம்பு நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரிக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் அதை ஒரு முக்கிய கோரிக்கையாக வைத்திருக்கின்றனர்.





