- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்... அட்ரா சக்க...

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்… அட்ரா சக்க இது நம்ம லிஸ்ட்லயே இல்லையேப்பா…

- Advertisement -

திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன், அதனைத் தொடர்ந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகிரா திரைப்படங்களை இயக்கினார். ஆனால் இவை, அவருக்கு பெரும் தோல்வியை மட்டுமே பரிசாக கொடுத்தன. இந்த சமயத்தில்தான் காத்திருந்து மார்க் ஆண்டனி திரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டார் ஆதிக் ரவிச்சந்திரன்.

 

- Advertisement -

யாருமே எதிர்பார்க்காதபடி இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றதுடன் வசூலிலும் 100 கோடி ரூபாய் ஈட்டியது. ஆதிக் ரவிச்சந்திரன் இப்படி படம் எடுத்திருப்பது என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய தூணாக இருந்தது எஸ்.ஜே சூர்யா என்றும் கூறினர்.

 

- Advertisement -

இது குறித்து சமீபத்தில் பேசிய ஆதிக், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நான் நடித்ததாகவும், அப்போது அஜித் சாரிடம் பேசிய போது அவர்தான் ஒரு பெரிய படத்தை இயக்க தனக்கு அறிவுரை வழங்கியதாகவும் தெரிவித்திருந்தார். தான் அஜித் ரசிகர் என்பதை அவர் பல மேடைகளிலும் காட்டி இருக்கிறார்.

 

இப்படியான சூழலில் தான், அஜித் குமாரை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். கையில் டாட்டூ, விதவிதமான கண்ணாடி, கலர் கலாரான சட்டை என இதுவரை பார்த்திராத அஜித்குமாரை காட்டி வரும் ஆதிக் ரவிச்சந்திரன், தனது திரைப்படத்திற்கு குட் பேட் அக்லி என டைட்டில் வைத்திருக்கிறார்.

 

தெலுங்கின் முன்னணி நிறுவனமான மைத்திரி மூவிஸ் நிறுவனம் தான் இதனை தயாரித்து வருகிறது. இதன் சூட்டிங் பணிகள் தற்போது ஸ்பெயின் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இப்போது வரை அதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

 

நடிகர் பிரசன்னா இந்த திரைப்படத்தில் நடிப்பதை அவரே இணையத்தில் தெரிவித்து இருந்தார். மற்றபடி திரிஷா, தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் படத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அது குறித்த அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவே இல்லை. இந்தத் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாக இருக்கிறது. இப்படியான சூழலில் தான் குட் பேட் அக்லி படத்தின், தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. அண்மையில் வெளியான விஜயின் கோட் திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையையும் இந்த நிறுவனமே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்