- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையன் படம் தந்த அபார வெற்றி, படக்குழுவினருக்கு கிடைத்த ஏமாற்றம் - தீபாவளி நேரத்துல லைகா...

வேட்டையன் படம் தந்த அபார வெற்றி, படக்குழுவினருக்கு கிடைத்த ஏமாற்றம் – தீபாவளி நேரத்துல லைகா புரடக்சன்ஸ் பெரிய தப்பு பண்ணிட்டாங்களே?

- Advertisement -

கத்தி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனமாக லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் அறிமுகமானது. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த கத்தி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தொடர்ந்து பல படங்களை தயாரித்தது.

சமீபத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரித்த தர்பார், 2.0 பொன்னியின் செல்வன் 2 இந்தியன் 2 லால் சலாம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய தோல்வி சந்தித்தன. இந்த படங்கள் தந்த பலத்த நஷ்டத்தால் இனி படங்கள் தயாரிப்பதில்லை என்ற முடிவுக்கு லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் வரும் அளவுக்கு இந்த படங்கள் பல நூறு கோடி ரூபாய் நஷ்டத்தை தந்துவிட்டன.

- Advertisement -

அதுவும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படங்கள் பல நூறு கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆனால் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தசெ ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த வேட்டையன் படம் லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கு நல்ல கணிசமான லாபத்தை கொடுத்துள்ளது.

இதன் மூலம் மீண்டும் படங்களை தயாரிக்கும் முடிவுக்கு வந்துள்ள லைகா புரடக்சன்ஸ் மீண்டும் ரஜினியை தங்களுக்காக ஒரு படம் பண்ணி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஏனெனில் ஏற்கனவே லைகா தயாரிப்பில் 2.0 லால் சலாம் தர்பார் ஆகிய 3 படங்களில் நீங்கள் நடித்த நிலையில், இந்த 3 படங்களும் பிளாப் படங்களாக பலத்த நஷ்டத்தை தந்தன.

- Advertisement -

ஆனால் தற்போது வேட்டையன் படம் நல்ல வரவேற்பை பெற்று லாபத்தை கொடுத்திருக்கிறது. மீண்டும் ஒரு படம் எங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுத்தால், மிகவும் உதவியாக இருக்கும். நஷ்டத்தில் இருந்து மீண்டு வர வசதியாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டதால், இப்போது நடிகர் ரஜினிகாந்த் அதற்கு சம்மதித்ததாக தெரிகிறது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கு உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

இதற்கிடையே வேட்டையன் படத்தில் பணிபுரிந்த பெரும்பாலானவர்களுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. வேட்டையன் படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு இன்னும் சம்பள பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம், சில லட்சங்கள் சில ஆயிரங்கள் தான் சம்பளமாக தர வேண்டிய சூழ்நிலையில், இப்படி தீபாவளி நேரத்தில் தராமல் இருப்பது தொழிலாளர்களை மிகப்பெரிய வருத்தத்தில் தள்ளியுள்ளது. மிக விரைவில் இந்த பண பட்டுவாடாவை செய்தால் நன்றாக இருக்கும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்