- Advertisement -
Homeபொழுதுபோக்குவாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்ட நாம் தமிழர் கட்சி சீமான், விஜயை விமர்சித்து இப்படி...

வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்ட நாம் தமிழர் கட்சி சீமான், விஜயை விமர்சித்து இப்படி ஒரு பிரச்னை வந்துவிட்டதே? கலாய்க்கும் நெட்டிசன்கள்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய நடிகர் விஜய், கடந்த மாதம் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற கிராமத்தில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்தினார்.

யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் கூட்டம் கட்டி ஏறிவிட்டது. 50 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி என போலீசார் நிபந்தனை விதித்த நிலையில், மாநாட்டு பகுதியில் பல லட்சம் மக்கள் திரண்டு விட்டனர். அதிலும் மாநாட்டு மேடைக்கு முன் ரேம்ப் வாக்கில் நடந்த விஜய், தொண்டர்கள் வீசி எறிந்த கட்சி துண்டுகளை எடுத்து தன் கழுத்தில் போட்டுக்கொண்டது பெரிய ஹைலைட்டாக அமைந்தது.

- Advertisement -

இந்த மாநாட்டில், நடிகர் விஜய் தேர்ந்தெடுத்த அரசியல் தலைவராக 48 நிமிடங்கள் ஆவேசமாக பேசினார். குறிப்பாக திமுக, பாஜக அரசுகளை நேரடியாக குற்றம் சாட்டி பேசினார். எனது அரசியல் எதிரி குடும்ப ஆட்சி நடத்தி வரும் ஊழல் கட்சியான திமுகதான் என்றும் பகிரங்கமாக அறிவித்தார்.

ஆனால் மாநாடு நடப்பதற்கு முன் நடிகர் விஜயை, தம்பி தம்பி என பாசமாக பேசிக்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் நடிகர் மற்றும் இயக்குனர் சீமான், இப்போது நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுக தான் அரசியல் எதிரி என்று விஜய் கூறிய நிலையில், தவெக தான் என் அரசியல் எதிரி என்பதுபோல் சீமான் கடுமையான விஜயை பேசி வருகிறார்.

- Advertisement -

மேலும் விஜய் நடத்திய அரசியல் மாநாட்டில் வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் கட்அவுட் நான் வரைஞ்சது தம்பி என்றும் கிண்டலடித்து இருந்தார். சமீபத்தில் ஒரு நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் பேசிய சீமான், விஜய்க்கு பதில் சொல்லும் விதமாக, முத்தரையர் வீரமங்கை வேலுநாச்சியார், மாவீரன் அழகு முத்துக்கோன் உள்ளிட்ட சரித்திர நாயகர்களை நான் அடையாளம் காட்டியதால்தான் மக்களுக்கு தெரியும்.

நான் அவர்களை பற்றி எல்லாம் பேசவில்லை என்றால் யாருக்குமே தெரியாது என்று ஆவேசமாக பேசியிருந்தார். இதையடுத்து சீமானின் இந்த பேச்சுக்கு முத்தரையர், முக்குலத்தோர், யாதவர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் பேரமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. விஜயை விமர்சிப்பதற்காக இப்படி ஆவேசமாக பேசி, இப்போது வம்பில் மாட்டியிருக்கிறார் சீமான் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்