- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த இயக்குனர் மீது ஏற்பட்ட கோபம் ரஜினிக்கு இன்னும் தீரலையா? வாழை படம் பார்த்த அவருக்கு...

அந்த இயக்குனர் மீது ஏற்பட்ட கோபம் ரஜினிக்கு இன்னும் தீரலையா? வாழை படம் பார்த்த அவருக்கு அந்த படம் பார்க்க நேரமில்லையா? – இதென்னப்பா புது பஞ்சாயத்து?

- Advertisement -

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியான படம் தங்கலான். சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விக்ரம் நடிப்பு வழக்கம்போல வேற லெவலில் இருந்தது. இந்த படத்தில் பல காட்சிகளில் வசனங்கள் புரியவில்லை என்று ஒரு விமர்சனம் எழுந்ததால், படக்காட்சிகளின் கீழ் சப் டைட்டில் தமிழில் வரவும் படக்குழு ஏற்பாடு செய்தது. அதனால் தங்கலான் படம் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு படமாக உள்ளது.

- Advertisement -

அட்டக்கத்தி படத்தை இயக்கிய பா ரஞ்சித் மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை படங்களை இயக்கிய நிலையில், ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி, காலா ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார். அவரது இயக்கத்தில் வெளிவந்த தங்கலான் படத்தை ரஜினிகாந்த் பார்த்ததாக தெரியவில்லை. தங்கலான் படம் குறித்து பலரும் பாராட்டிய நிலையில், ரஜினி தரப்பில் தங்கலான் படம் குறித்த பாராட்டு இதுவரை இல்லை.

ஆனால் நேற்று, நடிகர் ரஜினிகாந்த் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படம் பார்த்துள்ளார், படம் பார்த்தது மட்டுமின்றி மாரி செல்வராஜ், மிகச் சிறந்த ஒரு தரமான இயக்குனர் என பாராட்டி, வாழ்த்து கடிதமும் எழுதி இருக்கிறார். அதில் படத்தின் சில காட்சிகளையும் குறிப்பிட்டும் ரஜினிகாந்த் அந்த கடிதத்தில் எழுதி இருக்கிறார். ரஜினியின் வாழ்த்தும், பாராட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ஆனால் சியான் விக்ரம் நடித்த, தங்கலான் படம் குறித்த விமர்சனம் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து வரவில்லை. அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார் பா ரஞ்சித். தனது படங்களின் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் படத்தை ரஜினி கண்டுகொள்ளவில்லை. இதனால் சியான் விக்ரமும் அப்செட் ஆகி இருக்கிறார்.

பா ரஞ்சித் மீதுள்ள கோபத்தால்தான் தங்கலான் படம் குறித்து ரஜினிகாந்த் கண்டுகொள்ளவில்லை என்பது உறுதியாகி விட்டது. சில மாதங்களுக்கு முன் ஒரு நேர்காணலில் பங்கேற்ற பா ரஞ்சித்திடம், தலித் மக்களுக்கு ஆதரவான படங்கள் என்று தெரியாமல்தான் ரஜினிகாந்த் கபாலி, காலா போன்ற உங்கள் படங்களில் நடித்தாரா, என்ற கேள்விக்கு பா ரஞ்சித் நக்கலாக சிரித்தது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி, சோஷியல் மீடியாவில் வைரலானது. அதனால்தான், வாழை படத்துக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த், தங்கலான் படத்தை அலட்சியப்படுத்தி விட்டார் என்பது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்