- Advertisement -
Homeபொழுதுபோக்குடிராகன் படப்பிடிப்பு தளத்தில் ஹீரோ நடிகர் பிரதீப் ரங்கநாதன் இப்படி நடந்துக்கொள்கிறாரா? திணறிய படக்குழு -...

டிராகன் படப்பிடிப்பு தளத்தில் ஹீரோ நடிகர் பிரதீப் ரங்கநாதன் இப்படி நடந்துக்கொள்கிறாரா? திணறிய படக்குழு – இது உருட்டா,, உண்மையான்னு தெரியலையே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்த இந்த படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, ஆர்ஜே ஆனந்தி, கேஎஸ் ரவிக்குமார், ராமர், ஷாரா, பிரவீணா, வினோதினி ரங்கநாதன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் பல ஆண்டுகள் கோமாவில் இருந்துவிட்டு பழைய நிலைக்கு திரும்பும் ஜெயம் ரவி, அவரை சுற்றி நடந்துள்ள மாற்றங்கள், சமூகத்தில் மாறியுள்ள சூழல்கள் குறித்தும், சமூக வலைதளங்களின் தாக்கம் குறித்து அறிந்து அச்சப்படுவதும், அதை மாற்ற முயற்சிப்பதும்தான் இந்த படத்தின் கதையாக இருந்தது. ஓரளவுக்கு ரசிகர்களுக்கு பிடித்த படமாக இது இருந்தது.

- Advertisement -

கோமாளி படத்தில், கிளைமாக்ஸ் காட்சியில் ஆட்டோ டிரைவர் கேரக்டரில் நடித்திருந்த பிரதீப் ரங்கநாதன், அடுத்து அவரே கதாநாயகனாக நடித்து இயக்கிய படம்தான் லவ் டுடே. இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரவீணா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கடந்த 2022ம் ஆண்டில் வெளியாக பெரிய வெற்றியை பெற்றது.

காதலர்களை செல்போன் மாற்றிக்கொள்ளும்போது, அவர்களது மறைக்கப்பட்ட பக்கங்களை ஒருவரை ஒருவர் அறிந்துக்கொள்கின்றனர். அதுவரை காதலர்களாக இருந்த அவர்கள் ஒரு கட்டத்தில் சண்டைக்கோழிகளாக மாறி, காதல் காணாமல் போகிறது. அதை மிகவும் சுவாரசியமாகவும், காமெடி கலந்து அழுத்தமான கதையாக சொல்லி இருந்தார் பிரதீப் ரங்கநாதன்.

- Advertisement -

இந்த படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக் என்ற படத்தில் நடித்துள்ள பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ஓ மை கடவுளே என்ற வெற்றிப் படத்தை கொடுத்தவர். இப்போது சிம்பு நடிக்கும் 49வது படத்தை இயக்கவும் கமிட் ஆகியிருக்கிறார். அந்த படத்தை தி கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் டிராகன் படப்பிடிப்பு தளத்தில் உள்ள நடிகர் பிரதீப் ரங்கநாதன், ஹீரோ என்ற கெத்து இல்லாமல், சக நடிகர், நடிகைகளிடம் அங்குள்ள தொழிலாளர்களிடம் மிகவும் சகஜமாக பேசி வருகிறார். ரூ. 17 கோடி இந்த படத்தில் நடிக்க அவர் சம்பளம் வாங்கும் நிலையில், படப்பிடிப்பு குழுவிடம் எந்த பந்தாவும் காட்டாமல், அவர் நட்புடன் நெருக்கமாக பழகி வருவது, படப்பிடிப்பு குழுவினரை, திணற வைத்துள்ளது. இப்படியும் ஒரு யதார்த்த மனிதராக பழகுகிறாரே என பலரும் அவரை புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்