- Advertisement -
Homeபொழுதுபோக்குராயன் படத்தை மறுத்த தயாரிப்பு நிறுவனம், ராஜ்குமார் பெரிய்சாமி இயக்கும் படத்தில் தனுஷூக்கு மீண்டும் வாய்ப்பு...

ராயன் படத்தை மறுத்த தயாரிப்பு நிறுவனம், ராஜ்குமார் பெரிய்சாமி இயக்கும் படத்தில் தனுஷூக்கு மீண்டும் வாய்ப்பு தந்தது எப்படி, அட இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கா?

- Advertisement -

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் அவரது நடிப்பில், இயக்கத்தில் வெளியான படம் ராயன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது தனுஷ் நடித்த 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து, அவரே டைரக்ட் செய்திருந்தார். சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா முரளி, துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.

ராயன் படம் ரிலீஸான சில தினங்கள், மிக மோசமான வன்முறை படம். தனுஷ் நடிகராக ஜெயித்தாலும், ராயன் படத்தில் இயக்குனராக தோற்றுவிட்டார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரத்தம், கத்தி, துப்பாக்கி என வன்முறையே இருக்கிறது என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதையும் கடந்து படம் பெரிய வெற்றியை பெற்றது. ரூ. 155 கோடி வசூலை கடந்தது.

இதையடுத்து தனுஷ் குபேரா என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து இட்லிக்கடை என்ற படத்தை இயக்கி வருகிறார். தொடர்ந்து இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளார். இட்லிக்கடை படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்றும் தனுஷ் இன்று அறிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதற்கான பட பூஜை நடத்தப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மதுரையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் அன்பு தயாரிக்கிறார். அவரது கோபுரம் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

ஆனால் ஏற்கனவே தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தை கோபுரம் பிலிம்ஸ்தான் தயாரிக்க இருந்தது. ஆனால் தனுஷிடம் ராயன் படத்தின் கதையை கேட்ட தயாரிப்பாளர் மதுரை அன்பு, வன்முறை நிறைந்த படக்கதையாக இருந்ததால் ராயன் படத்தை தயாரிக்க மறுத்துவிட்டார். அதனால் ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆனால் இந்த முறை ராஜ்குமார் பெரியசாமி கதை என்பதால், தனுஷ் நாயகனாக நடிக்க சம்ம்தித்து, படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது.

சற்று முன்