- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் மினி ரமேஷ், பெரிய ரமேஷ் யாருன்னு தெரியுமா? விமல் என்னோட பேரை...

தமிழ் சினிமாவில் மினி ரமேஷ், பெரிய ரமேஷ் யாருன்னு தெரியுமா? விமல் என்னோட பேரை எடுத்துக்கிட்டான் – மனம் திறந்து பெரிய நடிகர் விதார்த்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர் விதார்த். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் நடித்து விதார்த், தன்னை ஒரு சிறந்த ஆளுமை மிக்க நடிகராக வெளிப்படுத்தி வருகிறார்.

மைனா படத்தை தொடர்ந்து விதார்த் நடித்த குற்றமே தண்டனை, ஆயிரம் பொற்காசுகள், காற்றின் மொழி, ஒரு கிடாயின் கருணை மனு, ஜன்னல் ஓரம், குய்கோ, பயணிகள் கவனிக்கவும், என்றாவது ஒருநாள், கொள்ளைக்காரன், குரங்கு பொம்மை, மயிலு, லாடம் என பல படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

- Advertisement -

குறிப்பாக விதார்த் படங்களில் அவரது நடிப்பு வெகு யதார்த்தமாக இருக்கும். முகபாவனைகளிலும், உடல்மொழியிலும் அவரது நடிப்பு வெகு இயல்பாக வெளிப்படும். விதார்த் நாயகனாக அறிமுகமான மைனா படத்தில், சிறைக்கைதியான அவர் தன் காதலி மைனாவை பார்த்த தப்பித்து வருவதும், காதலியோடு போலீசாருடன் சிறைக்கு செல்வதும் காதலிக்காக உருகுவதும் நடிப்பில் அதகளம் செய்திருப்பார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் விதார்த் கூறியதாவது, என் பெயர் ரமேஷ், விமல் பெயரும் ரமேஷ்தான். கூத்துப்பட்டறையில் இருந்த எங்களை மினி ரமேஷ், பெரிய ரமேஷ் என்றுதான் அழைப்பார்கள். விமல் பேரை மாத்தப் போறேன்னு சொன்னான். அப்போ நான் என் பெயரை அமலன் என மாற்ற நினைத்தேன். அமலன் என்றால் மாசற்றவன், அழுக்கற்றவன் என்று அர்த்தம். அதனால் அந்த பெயரை எனக்கு வைக்க முடிவு செய்தேன்.

- Advertisement -

ஆனால் இயக்குனர் இந்த பெயர் வேண்டாம், நியூமராலஜி வேறு பெயர் பாருங்க என்று கூறினார். அப்புறம் நியூமராலஜிபடி 3 பெயர்கள் சொன்னார்கள். விமல், விதார்த், விபின் என்ற அந்த பெயர்களில் எனக்கு விமல் பெயர் ரொம்ப பிடித்திருந்தது. ஏனென்றால் எனக்கு கமல் சாரை பிடிக்கும். அதனால் கமல் போல விமல் என நினைத்தேன்.

ஆனால் நான் விமல் பெயரை எனக்கு வைக்க தேர்வு செய்திருந்த நிலையில், அந்த பேரை விமல் எடுத்துக் கொண்டதாக போனில் சொல்லிக்கொண்டு இருந்தான். விமல் என அவன் அந்த பெயரை வைத்துக் கொண்டான். அதனால் நான் விதார்த் பெயரை எடுத்துக்கொண்டேன். விதார்த் என்றால் வித்தைகள் கற்றவன் என்று வந்ததால், அதுவும் பிடித்திருந்தது. அப்படிதான் எனக்கு விதார்த் என பெயர் வந்தது என, நடிகர் விதார்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்