தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சிறுத்தை சிவா. அவரது இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் வருகிற 14ம் தேதி ரிலீஸாகிறது. 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸாகும் கங்குவா படத்துக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
வரலாற்று பின்னணியை கொண்ட கதையில் உருவான இந்த படத்தின் முதல் பாகம் வருகிற 14ம் தேதி வெளியாகிறது. இதைத்தொடர்ந்து 2வது பாகம் அடுத்த ஆண்டில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த படத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். திஷா பதானி நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக கார்த்தி அறிமுகமாகிறார்.
எதற்கும் துணிந்தவன் படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் கங்குவா வெளியாகிறது. அதனால் சூர்யா தொடர்ந்து படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கும் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி நடித்த சிறுத்தை படம் மூலம் சிவா இயக்குனராக அறிமுகமானார். அதனால்தான் சிறுத்தை சிவா என்று அவர் அழைக்கப்படுகிறார். தெலுங்கில் வெளியான விக்ரமாகுடு என்ற படத்தின் ரீமேக் படம்தான் சிறுத்தை என்பது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டில் வௌியான இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
அதன்பிறகு வீரம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற படங்களை சிறத்தை சிவா இயக்கினார். இந்த படங்களில் 3 படங்கள் அஜீத்குமார் நடிப்பில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. விஸ்வாசம் படம் பார்த்த ரஜினிகாந்த் தன்னுடைய அண்ணாத்த படத்தை இயக்கும் வாய்ப்பை சிறுத்தை சிவாவுக்கு கொடுத்தார். ஆனால் அண்ணாத்த பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை.
இப்போது மீண்டுமு் 13 ஆண்டுகள் கழித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளார் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. கங்குவா படத்தின் 2ம் பாகத்தில் பிரதான வில்லனாக கார்த்தி தான் நடிக்க உள்ளார். அதற்கு முன்னதாக கார்த்தியை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க சிறுத்தை சிவா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மீண்டும் சிறுத்தை சிவா – கார்த்தி கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.





