- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார், கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு, மற்ற நடிகர்களும் இதற்கு ஆதரவு தர முன்வருவார்களா?...

அஜீத்குமார், கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு, மற்ற நடிகர்களும் இதற்கு ஆதரவு தர முன்வருவார்களா? – அதிலும் அவர் இதற்கு சம்மதிப்பாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்காக இருப்பவர்கள் நடிகர் கமல்ஹாசன் மற்றும் அஜீத்குமார். அதே போல் ரஜினிகாந்த், விஜய் அவர்களுக்கு இணையான அதே வரிசையில் டாப் ஸ்டார்களாக இருக்கின்றனர். தமிழ் சினிமாவை பொருத்த வரை தோல்வி படங்களில் கூட லாபம் தரும் நட்சத்திர நடிகர்களாக இவர்கள் 4 பேரும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் அஜீத்குமார் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி தன்னை இனிமேல் அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் என்றோ, தல அஜீத்குமார் என்றோ அழைக்கவோ, குறிப்பிடடோ கூடாது. அஜீத்குமார் அல்லது ஏகே என்பதே என்னுடைய அடையாளமாக இருக்கும் என்று அறிவித்தார்.

- Advertisement -

இப்போது நடிகர் கமல்ஹாசனும் அதே போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி உலக நாயகன், புன்னகை மன்னன், காதல் மன்னன், சகலகலா வல்லவன், கலைஞானி, சூப்பர் ஆக்டர் என பல பட்டப் பெயர்களில் கமலை அழைத்து வந்த நிலையில், இனிமேல் கமல்ஹாசன், அல்லது கமல் என்று அழையுங்கள். எந்த அடைமொழியும் வேண்டாம் என்று அதிரடியாக அறிக்கை வெளியிட்டு கூறியுள்ளார்.

ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் உட்பட காமெடி நடிகர்கள் வரை பட்டப் பெயர்கள் உள்ளன. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், புரட்சித் தமிழன் சத்யராஜ், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், புரட்சி புயல் விஷால், சின்ன தளபதி பரத், வைகை புயல் வடிவேலு, காமெடி கிங் கவுண்டமணி, ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் என அழைக்கப்படுகின்றனர்.

- Advertisement -

இப்போது கமல்ஹாசன், அஜீத்குமார் போன்ற உச்ச நடிகர்களே தங்களுக்கு அடைமொழி வேண்டாம் என மறுத்துவிட்ட நிலையில் மற்ற நடிகர்களும் அப்படி ஒரு முடிவுக்கு வருவதாக, ஒரு சிறந்த நடவடிக்கையாக இருக்கும். ஏனெனில் புகழுரைக்கு ஆசைப்படாத கலைஞர்களாக இருப்பதே அவர்களுக்கும் பெரிய மரியாதையை பெற்றுத் தரும்.

ஆனால் இனி சூப்பர் ஸ்டார் விஜய் என்றவுடன் நிலைகுலைந்து போன ரஜினிகாந்த் ஜெயிலர், வேட்டையன் படங்களில் சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார் என பாடல்களில் கதறியதை பார்த்து ரசிகர்கள் வாய்விட்டு சிரித்தனர், விஜய் தளபதி என்றாலும் அரசியலுக்கு சென்றுவிட்டார். 73 வயது கடந்த நிலையில், இனியாவது சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம் என்று ரஜினிகாந்த் மறுப்பாரா என்பதுதான் பலரது கேள்வியாக, விமர்சனமாக இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்