- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகை நவ்யா நாயருக்கு இப்படி ஒரு பிரச்னையா? கேட்கவே ரொம்ப பயங்கரமா இருக்குதே… இரவெல்லாம்...

பிரபல நடிகை நவ்யா நாயருக்கு இப்படி ஒரு பிரச்னையா? கேட்கவே ரொம்ப பயங்கரமா இருக்குதே… இரவெல்லாம் எப்படி சமாளிக்கிறாரோ? – வருத்தப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் நவ்யா நாயர். தமிழிலும் நவ்யா நாயர் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் அழகிய தீயே என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அடுத்து சேரன் நடித்த மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, தங்கர்பச்சானுக்கு ஜோடியாக சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் கேரளாவில் சைக்கிளில் வந்த ஒருவர் மீது மோதிய லாரி நிற்காமல் சென்றுவிட்டது. அப்போது அந்த வழியாக காரில் வந்த நவ்யா நாயர், அந்த லாரியை சினிமா பாணியில் துரத்திச் சென்று வழியில் மடக்கி, போலீசாருக்கு தகவல் கொடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். இதற்காக பலரும் நவ்யா நாயரின் துணிச்சலை பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பொதுவாக மலையாள நடிகைகள் என்றாலே மிகவும் அழகாக இருப்பவர்கள் என்பதையும் கடந்து நடிப்பில் அவர் மிகுந்த ஆற்றல் மிக்கவர்களாகவும் இருக்கின்றனர். அந்த லிஸ்ட்டில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டிய ஒருவராக நவ்யா நாயர் பல படங்களில், தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அசத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை நவ்யா நாயர், கடந்த பல ஆண்டுகளாக ஒரு விஷயத்தால்ல் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு சிறு வயதில் இருந்தே பயமுறுத்தும் மோசமான கெட்ட கனவுகள் வரும். குறிப்பாக பேய்க் கனவுகள் கண்டு வருகிறேன். இவை எனது நிம்மதியான தூக்கத்தை கெடுக்கின்றன.

- Advertisement -

சில நேரங்களில் இரவில் கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்திருப்பேன். மீண்டும் தூங்க முயற்சித்தாலும் அதே கனவுகள் திரும்ப திரும்ப வரும். சில நேரம் நள்ளிரவு 2 மணிக்கு கூட கனவு கண்டு விழிப்பு வந்துவிடும். அதன் பிறகு தூங்கவே பயமாக இருக்கும்.

பொதுவாக கனவில் என்னைச் சுற்றி பாறைகளும் மணலும் இருக்கும். ஒரு கற்பனை உலகில் நான் சிக்கி இருப்பேன். சுற்றியும் கருப்பு நிறத்தில் ஒரு விசித்திரமான உயிரினம் இருக்கும். அதன் வாயை திறந்தால் முக்கோண பற்கள் தெரியும். அது பார்க்க பேய் போலவே இருக்கும். அதை கனவில் பார்த்து மிகவும் பயந்து போவேன் என்று அவர் கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அவரது ரசிகர்கள், அட நவ்யா நாயருக்கு இப்படி ஒரு பிரச்னையா, இரவில் தூங்காமல் பாவம், எப்படி சமாளிக்கிறாரோ என்று வருத்தத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்