- Advertisement -
Homeபொழுதுபோக்குசீனியர் சூர்யாவால், ஜூனியர் சூர்யாவுக்கு பிரச்னையா? விஜய் சேதுபதி மகன் நடித்த பீனிக்ஸ் படம் ரிலீஸ்...

சீனியர் சூர்யாவால், ஜூனியர் சூர்யாவுக்கு பிரச்னையா? விஜய் சேதுபதி மகன் நடித்த பீனிக்ஸ் படம் ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு, அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து பிரபல நடிகராக வலம் வருகிறார். சில மாதங்களுக்கு முன் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் விஜய் சேதுபதி, பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து அட்லி தயாரிப்பில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கும் ஒரு படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

- Advertisement -

விஜய் சேதுபதி மகன் சூர்யா, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கிய பீனிக்ஸ் விழான் ஒரு புதிய படத்தில் நடித்தார். இந்த படம் நவம்பர் 14ம் தேதி ( இன்று) ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. நடிகர் சிவக்குமார் மகன் சூர்யா நடித்த கங்குவா படம் ரிலீஸாகிற அதே நாளில், விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்த பீனிக்ஸ் விழான் படமும் ரிலீஸாகிறது என்று பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் இப்போது ஏற்கனவே அறிவித்தப்படி பீனிக்ஸ் படம் ரிலீஸ் இல்லை என்று படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பீனிக்ஸ் விழான் என்ற படத்துக்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சூர்யாவுடன் வரலட்சுமி சரத்குமார் சம்பத் நடிகை தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

பீனிக்ஸ் படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான பீனிக்ஸ் முன்னதாக நவம்பர் 14ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தது. எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது. ஒரு குழுவாக நாங்கள் இன்னும் அதிக உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் சிறந்த சினிமாவை வழங்க அயராது உழைத்து வருகிறோம். மாற்றியமைத்த வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பீனிக்ஸ் விழான் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் பிரச்னை காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் சீனியர் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் மிகப்பெரிய அளவில் பல நூற்றுக்கணக்கான தியேட்டர்களில் ரிலீசாக நிலையில், ஜூனியர் நடிகர் சூர்யா நடித்த இந்த படம் ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்