- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படப்பிடிப்பில் அதிகரித்து வரும் நட்சத்திர பட்டாளம், களத்தில் இறங்கி அடிக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...

கூலி படப்பிடிப்பில் அதிகரித்து வரும் நட்சத்திர பட்டாளம், களத்தில் இறங்கி அடிக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – இதெல்லாம் வேற லெவல் ப்ரோ…!

- Advertisement -

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். குறும்படங்களை இயக்கிய அனுபவங்களோடு நேரடியாக களத்தில் இயக்குனராக வந்தவர். முதல் படத்திலேயே தனது முத்திரையை பதித்தார். மாநகரம் படம் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ ஆகிய வெற்றிப் படங்களை தந்த லோகேஷ் கனகராஜ் இப்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படப்பிடிப்பை நடத்தி வருகிறது. 70 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ள அவர் தொடர்ந்து படுவேகமாக செயல்பட்டு வரும் பிப்ரவரி இறுதிக்குள் ஷூட்டிங்கை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

ஏனெனில் கூலி படத்துக்கு பிறகு கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். பிறகு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அடுத்தடுத்த லைன் அப்களில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை மாஸ் ஹிட் படமாக தரவும் முடிவு செய்திருக்கிறார்.

கூலி படத்தில் ஏற்கனவே உபேந்திரா, நாகர்ஜூனா, சத்யராஜ், அமீர்கான், சிவராஜ்குமார், ஸ்ருதிஹாசன், நித்யாராம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அடிக்கடி மாஸ் நடிகர்களை படப்பிடிப்பு தளத்துக்கு வரவழைத்து 3 நாட்கள் வரை அவர்கள் நடிக்கும் காட்சிகளை படம் எடுத்துவிட்டு திருப்பி அனுப்புகிறார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

அதாவது ஷூட்டிங் ஸ்பாட்டில் காட்சிகள் படமாக்கப்படும் போது, இந்த கேரக்டரில் இந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்குமே என்று லோகேஷ் கனகராஜூக்கு தோன்றியவுடன் அவரே நேரடியாக அவர்களுக்கு போன் செய்து பேசுகிறார். 3 நாட்கள் மட்டும் ஷூட்டிங், பவர்புல் கேரக்டர் நடித்துக்கொடுங்கள் என்று கேட்கிறார்.

மேனேஜர் அல்லது உதவி இயக்குனர் இந்த மாதிரி கேட்டால் தவிர்க்க நினைக்கும் நட்சத்திரங்கள், நேரடியாக லோகேஷ் கனகராஜே போன் செய்து அழைக்கும் போது, மறுக்க முடியாமல் உடனே ஓகே சொல்கின்றனர். நல்ல சம்பளமும் அவரே பேசி விடுவதால் சந்தோஷமாக வந்து நடித்துவிட்டு செல்கின்றனர். இதனால் கூலி படம் ரிலீஸாகும் போது எதிர்பார்க்காத பல நட்சத்திர நடிகர்களை திரையில் ரசிகர்கள் காண முடியும். இது ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்