- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷிடம் மட்டுமல்ல… கேரளாவிலும் தன் வேலையை காட்டிய நடிகை நயன்தாரா, கோர்ட்டுக்கு போன விவகாரம் -...

தனுஷிடம் மட்டுமல்ல… கேரளாவிலும் தன் வேலையை காட்டிய நடிகை நயன்தாரா, கோர்ட்டுக்கு போன விவகாரம் – என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…?

- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தராா. சமீபத்தில் நயன்தாரா பியாண்ட் த பேரி டேல் என்ற ஆவணப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில வீடியோ காட்சிகளை, அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷின் அனுமதியின்றி நயன்தாரா பயன்படுத்தி இருந்தார்.

இந்த விவகாரத்தில், நடிகர் தனுஷ் நடிகை நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி ரூ. 10 கோடி கேட்டிருந்தார். இதற்கு நயன்தாரா, விக்னேஷ்சிவன் தரப்பில் இருந்து தனுஷை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் அந்த ஆவணப்படத்தை ஓடிடி தளத்துக்கு ரூ. 80 கோடிக்கு நயன்தாரா விலைக்கு விற்றதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தமிழ்நாட்டில் நடந்த தனுஷ் பிரச்னையை போலவே, கேரளாவிலும் ஒரு விவகாரத்தில் நடிகை நயன்தாரா சிக்கியிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நயன்தாரா நயன்ஸ் என்ற பெயரில் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இந்தியா முழுவதும் அதற்கான மார்க்கெட்டிங் செய்தும் வருகிறார்.

இந்நிலையில் கேரளாவில் மலையாளத்தில் கரின்காலி என்ற பெயரில் வெளியான இசை ஆல்பத்தில் இருந்து ஒரு பாடலை, தனது தயாரிப்பு பொருட்களுக்கான விளம்பரத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் பயன்படுத்தி உள்ளனர். இணையத்தில் அது 41 மில்லியனுக்கு மேல் வியூஸ் போயிருக்கிறது. ஆனால் அந்த மலையாள ஆல்பத்தில் இருந்த பாடலை பயன்படுத்த, நயன்தாரா தரப்பு சம்பந்தப்பட்டவர்களிடம் முறையாக அனுமதி வாங்கவில்லை.

- Advertisement -

ஆனால் அதே மலையாள இசை ஆல்பத்தில் இருந்த ஒரு பாடலை பகத் பாசில் நடித்த ஆவேசம் படத்தில் பயன்படுத்தி உள்ளனர். ஆனால் அதற்கு உரியவர்களிடம் பேசி முறையாக அனுமதி பெற்று, அதற்கான தொகை கொடுத்து உரிமம் பெற்று அந்த படத்தில் அந்த பாடலை பயன்படுத்தி உள்ளனர்.

ஆனால் நயன்தாரா தனது அழகு சாதன விற்பனை பொருட்களை விற்பனைக்காக, வணிகரீதியான விளம்பத்தை சோசியல் மீடியாவில் செய்ய அந்த மலையாள இசை ஆல்ப பாடலை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளார். இதுகுறித்து அந்த மலையாள இசை ஆல்பம் சார்ந்தவர்கள், நயன்தாரா தரப்பை தொடர்பு கொண்ட போது எந்த பதிலும் இல்லை. இதையடுத்து அவர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது கோர்ட்டில் வழக்கு தொடுத்திருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. தனுஷ் விவகாரம் வெளியான நிலையில், இந்த விஷயமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்