- Advertisement -
Homeபொழுதுபோக்குஆர்யா, ஜீவா, சூரி, சிம்ரன் மற்றும் பிரியா பவானி ஷங்கர்….- இவர்களுக்குள் இப்படி ஒரு ஒற்றுமையா?...

ஆர்யா, ஜீவா, சூரி, சிம்ரன் மற்றும் பிரியா பவானி ஷங்கர்….- இவர்களுக்குள் இப்படி ஒரு ஒற்றுமையா? – ஆனா நிழலை நம்பாம நிஜத்தை நம்பி கெத்து காட்டறாங்களே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக இருப்பவர்கள் ஆர்யா, ஜீவா, சூரி மற்றும் நடிகைகள் சிம்ரன், பிரியா பவானி ஷங்கர். துவக்கத்தில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்த ஜீவா, சமீப காலமாக தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த பிளாக் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜீவா ஆரம்பத்தில் சிவா மனசுல சக்தி, கோ, சிங்கம்புலி, தெனாவெட்டு, ரௌத்திரம், திருநாள், அரண் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்தார். ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த் ஆகியோருடன் ஜீவாவும் நண்பன் கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் சமீபமாக அவருக்கு பெரிய வெற்றிப் படங்கள் இல்லை. பிளாக் படத்தை தொடர்ந்து சிவா மனசுல சக்தி 2ம் பாகத்திலும் ஜீவா நடிக்க உள்ளார்.

- Advertisement -

நடிகர் ஆர்யாவும் துவக்கத்தில் சில வெற்றிப் படங்களை கொடுத்தார். ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை. சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் நடித்த அரண்மனை 2 படமும் சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது பா ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் என்ற படத்தில் வில்லனாக ஆர்யா நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

காமெடி நடிகராக இருந்த சூரியை கதாநாயகனாக மாற்றியவர் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை படத்தின் வெற்றிக்கு பிறகு கருடன் படம் சூரிக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. ஆனால் கொட்டுக்காளி படம் பலத்த ஏமாற்றம் தந்தது. அடுத்து வரும் டிசம்பர் 20ம் தேதி விடுதலை 2 சூரி நடிப்பில் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

இத்துடன் நடிகை பிரியா பவானி ஷங்கர் மேயாத மான் என்ற படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனால் அவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறாததால் ராசியில்லாத நடிகை என விமர்சிக்கப்பட்டார். ஆனால் சமீபத்தில் வெளியான டிமாண்டி காலனி 2, பிளாக் ஆகிய படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக அவருக்கு அமைந்தன. அதே போல் சிம்ரனும் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர்.

இந்நிலையில் நடிகர் ஆர்யா சென்னையில் அண்ணா நகர் மற்றும் வேளச்சேரியில் சீ ஷெல் என்ற பெயரில் ஓட்டல் நடத்துகிறார். ஒன் எம்பி என்ற பெயரில் ஜீவாவுக்கும் ஓட்டல் உள்ளது. மதுரையில் அம்மன் உணவகத்தை சூரி நடத்தி வருகிறார். சென்னை சோழிங்கநல்லூரில் சிம்ரனுக்கு சொந்தமான குட்கா பை சிம்ரன் என்ற ஓட்டல் உள்ளது. நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு சென்னையில் லயன்ஸ் டின்னர் என்ற உணவகம் உள்ளது. சினிமாவில் நடித்தாலும், எப்போதுமே நிரந்தர வருமானம் தரும் உணவகங்களை இவர்கள் 5 பேரும் சொந்தமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்