- Advertisement -
Homeபொழுதுபோக்குகோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக முதலில் நடிக்க வேண்டியவர் இவரா? - தேடி வந்த...

கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக முதலில் நடிக்க வேண்டியவர் இவரா? – தேடி வந்த நல்ல வாய்ப்பை அவரே வேண்டாம்ன்னு மறுத்திருக்காரே?

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி நடித்த படங்களில் கோமாளி படம் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் கேமியோ ரோலில் ஆட்டோ டிரைவராக அவர் நடித்திருந்தார். கோமாளி படம் ஜெயம் ரவிக்கு நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.

பல ஆண்டுகள் கோமாவில் இருந்து மீண்டுவரும் கதாநாயகன், சமுதாயத்தில் நடந்துள்ள மாற்றங்களை கண்டு அதிர்ச்சியடைகின்றனர். குறிப்பாக மக்களின் வாழ்க்கை முறை வெகுவாக மாறியிருப்பதால் பெரிய ஏமாற்றத்தை சந்திக்கிறான். குறிப்பாக மொபைல் போன்களில், சமூக வலைதளங்களில் மக்கள் முழுகிப் போனதை பார்த்து வேதனைப்படுகிறான்.

- Advertisement -

இந்த படத்தில் காஜல் அகர்வால், யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், சம்யுக்தா, ஆர்ஜே ஆனந்தி, ராமர், பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தில் பல காட்சிகளில் மொபைல் போன், சமூக வலைதளங்களால் மக்கள் இழந்துவிட்ட வாழ்வியல் விஷயங்களை நினைவுப்படுத்தி இருந்தார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

கோமாளி படம் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் படம். இந்த படத்துக்கு பிறகு அவரே நாயகனாக நடித்து இயக்கிய படம்தான் லவ்டுடே. பிரதீப் ரங்கநாதனுடன் இவானா ராதிகா சத்யராஜ் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன்பிறகு இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.

- Advertisement -

இப்போது நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி நடித்த சொர்க்கவாசல் என்ற படம் வருகிற 29ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் ஆர்ஜே பாலாஜி தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆர்ஜே பாலாஜி, கோமாளி படம் குறித்த ஒரு முக்கிய தகவலை வெளியிட்டார்.

இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, கோமாளி படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இந்த படத்தில் நாயகனாக நடிக்குமாறு என்னிடம் கூறினார். ஆனால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். இவ்வளவு பெரிய படத்தில் நான் ஹீரோவாக நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா எனத் தெரியவில்லை. ஏனென்றால் அதுவரை நான் ஒரு படத்தில் கூட ஹீரோவாக நடிக்கவில்லை. அதனால் மறுத்துவிட்டேன், என்று கூறியிருக்கிறார். அதன்பிறகுதான் ஹீரோவாக ஜெயம் ரவி அந்த படத்தில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்