- Advertisement -
Homeபொழுதுபோக்குபலத்த ஏமாற்றத்தை தந்த மிஸ் யூ படம், தேவையில்லாமல் பேசிய நடிகர் சித்தார்த் - படம்...

பலத்த ஏமாற்றத்தை தந்த மிஸ் யூ படம், தேவையில்லாமல் பேசிய நடிகர் சித்தார்த் – படம் பிளாப் ஆனதற்கு இதுவும் ஒரு காரணமோ? கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தீயா வேலை செய்யணும் குமாரு சிவப்பு மஞ்சள் பச்சை காதலில் சொதப்புவது எப்படி ஜிகர்தண்டா அருவம் இந்தியன் 2 சித்தா என பல படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடும் முன்னணி நடிகராக மாறவில்லை.

எனினும் சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து சித்தார்த் தயாரிப்பில் பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. உண்மையில் இதுபோன்ற உணர்வுபூர்வமான படங்கள்தான் தமிழ் சினிமாவின் பலம் என்றும் விமர்சிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த படத்தில் திரைக்கதையும் காட்சியமைப்பும் சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும் மிகவும் உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் இயக்குனர் அருண்குமார் அழுத்தமாக சொல்லியிருந்தார். படத்தின் நாயகன் சித்தார்த் நடிப்பும் மற்ற கேரக்டர்களின் நடிப்பும் படத்தை வேற லெவலில் கொண்டு சென்றது.

இந்நிலையில் சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான படம் மிஸ் யூ. 7 மைல்ஸ் பெர் செகண்டு என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருந்தார். முக்கிய கேரக்டரில் கருணாகரன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தார். என் ராஜசேகர் டைரக்ட் செய்த இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.

- Advertisement -

மென்மையான காதல் கதை களத்தில் உருவான இந்த படம், வழக்கமான ஆக்சன் படங்களுக்கு மத்தியில் ரசிகர்களை வெகுவாக கவரும் ஒரு படமாக தான் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. ஒளிப்பதிவு, இசை சிறப்பாக இருந்தும் கதையோட்டத்தில் சுவாரசியம் இல்லாமல் இந்த படம் எடுபடாமல் போனது.

அதே நேரத்தில் புஷ்பா 2 பிரமோஷனுக்கு அல்லு அர்ஜூனுக்கு திரண்ட கூட்டத்தை பார்த்து, ஜேசிபி வாகனத்தை நிறுத்தினால் கூட அதைப் பார்க்க மக்கள் கூட்டம் திரண்டு விடும் என்று விமர்சித்து கெட்ட பெயர் வாங்கினார் சித்தார்த். அதனால் சித்தா படத்துக்கு தமிழ்நாட்டில் 3.5 கோடி ரூபாய் ஷேர் கொடுத்த நிலையில், மிஸ் யூ படத்துக்கு 45 லட்சம் ரூபாய் கூட தேறவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாக அவருக்கு அமைந்துவிட்டது.

- Advertisement -

சற்று முன்