- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த ஆண்டில் நிறைவேறாமல் போன அந்த கனவு…. வரும் 2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் ஜெயித்துக்...

இந்த ஆண்டில் நிறைவேறாமல் போன அந்த கனவு…. வரும் 2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் ஜெயித்துக் காட்டப் போவது யார்? – களத்தில் ரஜினி கமல் விஜய் அஜீத்… யாருக்கு வெற்றி?

- Advertisement -

இந்திய சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூல் என்பதெல்லாம் மிக மிக சாதாரணமாகி விட்டது. இந்திய திரையுலகில் இந்தி தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை புரிந்திருக்கின்றன. இதுவரை இந்தியில் 3 படங்கள் தெலுங்கில் 3 படங்கள் கன்னடத்தில் ஒரு படம் என 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை செய்திருக்கின்றன.

இந்திய திரைப்படத்துறையில் முக்கியமான திரைக்களமாக உள்ள தமிழ் சினிமாவில் இன்னும் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை என்பது நிகழ்த்தப்படாமல் இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்து வருகிறது. நடப்பாண்டில் வெளியான சில படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்த்திருந்த நிலையில் எந்த படமும் 500 கோடி ரூபாய் வசூலை கூட கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன், கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2, விஜய் நடித்த தி கோட் உள்ளிட்ட படங்கள் பலத்த ஏமாற்றத்தை தந்தன. அதுவும் சமீபத்தில் வெளியான சூர்யா நடித்த கங்குவா படம் 2000 கோடி வசூலை கடக்கும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார் ஆனால் கங்குவா படம் 200 கோடி ரூபாயை கூட இன்னும் தாண்டாமல் படம் மோசமான நிலையில் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதனால் இந்த 2024ம் ஆண்டில் இனி 1000 கோடி ரூபாய் வசூல் என்பது வெறும் கனவாகவே முடிய வேண்டிய சூழ்நிலையில், இன்னும் ஒரு மாதம் டிசம்பர் மட்டுமே இந்த ஆண்டில் உள்ளது. அதனால் இதற்குப் பிறகு வெளிவர உள்ள தமிழ் படங்கள் எதுவும் அந்த சாதனையை நிகழ்த்த நிச்சயமாக வாய்ப்பில்லை. அதனால் 2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் படம் வருமா என்று ரசிகர்கள் இப்போதே ஆவலாக காத்திருக்கின்றனர்.

குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக்லைப், இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் தளபதி 69, அஜீ்த்குமார் நடித்து வரும் மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி ஆகிய படங்கள் அடுத்த ஆண்டில் வெளிவர இருக்கின்றன.

இதில் எந்த படம் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை நிகழ்த்தப் போகிறது, வெல்லப் போவது ரஜினியா, கமலா, விஜயா, அஜீத்குமாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில் இந்த டாப் ஸ்டார் நடிகர்கள் 4 பேர் படங்களுக்கு மட்டும்தான் ரசிகர்களின் அபாரமான வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. அதிலும் விஜய் நடிக்கும் படம் அவரது கடைசி படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு தளபதி 69 மீது ஏற்பட்டுள்ளது.

சற்று முன்