- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறன் கதையை படமாக்கும் இயக்குனர் கௌதம் மேனன்; ஹீரோ அவரா? மியூசிக் டைரக்டர் பேரை கேட்டா…?...

வெற்றிமாறன் கதையை படமாக்கும் இயக்குனர் கௌதம் மேனன்; ஹீரோ அவரா? மியூசிக் டைரக்டர் பேரை கேட்டா…? – காம்பினேஷனே கலக்கலா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் கௌதம் மேனன். குறிப்பாக வேட்டையாடு விளையாடு காக்க காக்க வாரணம் ஆயிரம் விண்ணைத்தாண்டி வருவாயா வெந்து தணிந்தது காடு போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் கௌதம் மேனன்.

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு படங்கள் தயாரிப்பதிலும் படங்களில் நடிப்பதிலும் கௌதம மேனன் அதிக ஆர்வம் காட்டினார். அவரது தயாரிப்பில் உருவான சியான் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனால் சில மாதங்களில் அந்த படம் திரைக்கு வந்து விடும் என்று கௌதம் மேனன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசும்போது உறுதி அளித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் மலையாள நடிகர் மம்முட்டி நடித்த டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற படத்தை அவரே டைரக்ட் செய்து இருக்கிறார். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. வழக்கமாக தனது கதைகளை மட்டுமே இயக்கும் இயக்குனர் கௌதமேனன் இந்த முறை இயக்குனர் வெற்றிமாறனிடம் பேசி அவரது கதையை வாங்கி டைரக்ட் செய்ய இருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை விடுதலை 2 படங்களில் கௌதம் மேனன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்ட நிலையில் வெற்றிமாறன் கதையை கௌதம் மேனன் டைரக்ட் செய்ய விருப்பம் தெரிவித்த நிலையில், அதற்கான கதையை இயக்குனர் வெற்றிமாறன் கௌதம் மேனனுக்கு கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இதுவரை வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் ஆடுகளம் அசுரன் வடசென்னை விடுதலை விடுதலை 2 விசாரணை என அனைத்து படங்களுமே வெற்றி படங்களாக உள்ள நிலையில் நிச்சயமாக வெற்றிமாறன் கதையை கௌதம் மேனன் இயக்கினால் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்ட நடிகர் ரவி மோகன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் இசையமைப்பாளராக ஏஆர் ரகுமான் கமிட் செய்யப்பட இருக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. கௌதம் மேனன் ரவி மோகன் ஏஆர் ரகுமான் என இந்த காம்பினேஷன் ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், வெற்றிமாறன் கதையை முதன்முறையாக கௌதம் மேனன் இயக்குவதும் படத்தில் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்