தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இப்போது அவர் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். பொன்னியின் செல்வன், லியோ படங்களுக்கு பிறகு நடிகர் அஜீத்குமாருடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 2 படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் சீனியர் நடிகர் சிரஞ்சீவியுடன் விஸ்பம்பரா என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து சூர்யா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 45 படத்திலும் திரிஷா நாயகியாக கமிட் ஆகியிருக்கிறார். இதுதவிர மலையாளத்தில் 2 முக்கிய படங்களில் திரிஷா நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக்லைப் படம் வருகிற 2025ம் ஆண்டில் ஜூன் 5ம் தேதி வெளியாகிறது. இதிலும் திரிஷா சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வருகின்றன. 40 வயது கடந்த நிலையிலும், இன்னும் இளமை மாறாத அழகுடன் ஜொலிக்கும் திரிஷா, அடுத்தடுத்த படங்களில் நடிப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை திரிஷா அவ்வப்போது சில பதிவுகளை செய்வார். இது அவரது சொந்த நிகழ்வுகள் சார்ந்த படங்களாக, பதிவுகளாக இருக்கும். சில நேரங்களில் பொதுவாக, சமுதாய உணர்வுகளை சொல்லும் பதிவுகளையும் அவர் செய்வார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், And a wise man once told me, never be close to someone who is still close to, supports and is friends with someone who once broke you and they knew about it – (ஒரு புத்திசாலி ஒருமுறை என்னிடம் சொன்னார், இன்னும் நெருக்கமாக இருக்கும், ஆதரவளிக்கும் மற்றும் நண்பர்களாக இருக்கும் ஒருவருடன் ஒருபோதும் நெருங்காதீர்கள், ஒருமுறை உங்களை உடைத்த ஒருவரைப் பற்றி அவர்களுக்குத் தெரியும்) என்று திரிஷா பதிவிட்டுள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் இப்போது பெரியகுழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. யாரை குறிப்பிட்டு நடிகை திரிஷா இப்படி ஒரு பதிவை செய்துள்ளார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சிலம்பரசன், தனுஷ் உள்ளிட்ட சிலருடன் திரிஷா நெருங்கிய நட்பு கொண்டவர். அவர்களில் யாரேனும் ஒருவரை தான் இப்படி சொல்கிறாரா என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





