- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜயை விமர்சிக்கும்...

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜயை விமர்சிக்கும் வசனம் வருகிறதா? கிளம்பியது புது பஞ்சாயத்து!

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வருகிற டிசம்பர் 20ம் தேதி விடுதலை 2 படம் ரிலீஸாக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் விடுதலை படம் ரிலீஸான நிலையில், அடுத்த 6 மாதங்களுக்குள் அதன் 2ம் பாகமாக உருவாகி விடுதலை 2 படம் ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் 20 மாதங்களுக்கு பிறகு மிக தாமதமாக இந்த படம் வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீஸாக உள்ளது.

விடுதலை படம் அபார வெற்றியை பெற்ற நிலையில், விடுதலை 2 படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட ஆர்வமும், எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. விடுதலை படத்தில் இடம்பெற்ற வழிநெடுக காட்டுமல்லி பாடல் போலவே, விடுதலை 2ம் பாகத்தில் இடம்பெற்றுள்ள தெனந்தெனமும் உன் நினைப்பு என்ற இளையராஜா பாடல் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில், விடுதலை 2 படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில், அதில் ஒரு காட்சியில் வரும் வசனம், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜயை விமர்சிப்பதாக ஒரு பிரச்னை எழுந்துள்ளது. விஜயை விமர்சிக்கும் விதமாக இப்படி ஒரு வசனத்தை வெற்றிமாறன் அந்த காட்சியில் வைத்திருப்பதாக புகார் கூறப்படுகிறது.

தத்துவம் இல்லாத தலைவர்கள், ரசிகர்களை மட்டும்தான் உருவாக்குவாங்க, அது முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது என்ற வசனம் விடுதலை 2 படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றுள்ளது. அதாவது நடிகர் விஜய், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை நாங்கள் ஏற்க மாட்டோம். ஆனால் அவரது மற்ற கொள்கைகளை நாங்கள் ஆதரிப்போம் என்று விஜய், அரசியல் மாநாட்டில் கூறியிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்தனர். தனது கட்சியின் கொள்கை தலைவர் பெரியார் என கூறும் விஜய், அவரது கடவுள் கொள்கையை மட்டும் மறுத்துவிட்டு, மற்ற கருத்துகளை ஏற்றுக்கொள்வதாக கூறுவது முரண்பாடாக உள்ளது. அரசியலின் அடிப்படை தத்துவமில்லாமல் அவர் கொள்கைகளை கூறுகிறார் என்றும் சர்ச்சையை கிளப்பி விட்டனர்.

இப்போது விடுதலை 2 படத்தில் வருகிற இந்த வசனமும், நடிகர் விஜயை தான் விமர்சிப்பதாக உள்ளது என்று பலரும் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். விஜய்க்கு அரசியல் தத்துவமே சரியாக புரியவில்லை. அதைதான் வெற்றிமாறன், இந்த வசனம் மூலம் மறைமுகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார் என்றும் விவகாரம் செய்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி தீவிரவாதி கேரக்டரில் நடித்திருப்பதால், அவர் சொல்லும் புரட்சி கருத்தாக மட்டுமே இது உள்ளது. இது விஜய் பற்றி கூறுவது அல்ல என்றும் ஒரு தரப்பு விளக்கம் தந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்