- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை 2 பட விழாவில் நடிகை மஞ்சுவாரியார் பற்றி பேசிய இயக்குனர் வெற்றி மாறனுக்கு அவர்கள்...

விடுதலை 2 பட விழாவில் நடிகை மஞ்சுவாரியார் பற்றி பேசிய இயக்குனர் வெற்றி மாறனுக்கு அவர்கள் பெயரை சொல்ல நேரமில்லையா? விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் வெளியான படம் விடுதலை. பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை, விசாரணை படங்களின் வரிசையில் மீண்டும் ஒரு வெற்றியை தந்த படமாக வெற்றிமாறனுக்கு அமைந்தது. காமெடி நடிகர் சூரி, கதாநாயகனாக இதில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சில காட்சிகளே வந்திருந்தாலும் படத்தின் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களைே கவர்ந்தது. குறிப்பாக இளையராஜா இசையில் பாடல்கள் வேற லெவலில் இருந்தது. குறிப்பாக வழிநெடுக காட்டுமல்லி பாடலை முணுமுணுக்காத உதடுகளே இல்லை என்றும் கூறலாம்.

- Advertisement -

இப்போது விடுதலை 2 படம் உருவாகி வருகிற டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்றார். வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் எல்ரெட்குமார், ஒளிப்பதிவாளர் ராஜிவ்மேனன், நடிகை பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், விடுதலை 2 படத்தில் நடித்த நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இளையராஜா உள்ளிட்டோர் குறித்து பேசினார். அதிலும் விழாவுக்கு வராத போதும் நடிகை மஞ்சுவாரியர் குறித்து குறிப்பிட்டு பேசினார். 3 சீன் என்று சொல்லி அழைத்தேன். அவருக்கு படத்தில் 2 பாட்டு உள்ளது. சிறப்பான ரோலில் நடித்திருக்கிறார் என்று அவரை பாராட்டி பேசினார்.

- Advertisement -

வெற்றிமாறன் பேசிக்கொண்டிருந்த போது, அருகில் ஒருவர் உதவி இயக்குனர்கள் பெயர்களை சொல்லுமாறு கூறினார். அதற்கு வெற்றிமாறன், அதான் யார் பெயரையும் சொல்லலைன்னு சொல்லிட்டேனடா, டீம்ன்னா எல்லாரும் தானடா, டீம்ன்னா எல்லாரும்தானடா என்று கூறியவர், சட்டென எமோஷனல் ஆகி, தேங்க் யூ என்று மட்டும் கூறி பேச்சை பாதியில் நிறுத்தி மைக்கை வேகமாக வைத்துவிட்டு இருக்கைக்கு சென்றுவிட்டார்.

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, தனது அம்மா, மனைவிக்கு இயக்குனர் வெற்றிமாறன் நன்றி சொன்னார். உதவியாளர் வந்து காதில் சொன்னதும் மஞ்சுவாரியர் குறித்து பேசினார். ஆனால் உதவி இயக்குனர்களின் பெயரை சொல்லவில்லை. இதுபோன்ற நிகழ்ச்சியில் தங்கள் பெயர் சொல்வதையே அவர்கள் பெரிய ஆசையாக வைத்திருக்கின்றனர். அவர்கள் பெயர்களை சொல்ல வெற்றிமாறனுக்கு சொல்ல நேரமில்லையா, நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ரசிகர்களை டேய் என்று சொல்வதெல்லாம் சரியில்லை என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்