- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்களே சொல்லுங்க.. நான் யாரை சேக்கனும்.. ரசிகர்களிடம் பொறுப்பை ஒப்படைத்த யுவன் - தளபதி 69-ல்...

நீங்களே சொல்லுங்க.. நான் யாரை சேக்கனும்.. ரசிகர்களிடம் பொறுப்பை ஒப்படைத்த யுவன் – தளபதி 69-ல் நடக்கப்போகும் சம்பவம்

- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா பல்வேறு வெற்றி படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்து வருகிறார். அவரது தந்தை இளையராஜாவின் இசையமைப்பில் பல ஆயிரம் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் அவரது வழியில் வந்துள்ள யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளன.

Yuvan-1

அதிலும் குறிப்பாக காதல் பாடல்கள் என்றாலே யுவன் சங்கர் ராஜா தான் என்று இந்த காலத்து இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்துள்ள யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் சிறிது சறுக்களை கண்டாலும் தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் இழந்த தன் இடத்தை மீட்டெடுக்க தீவிரமான உழைப்பை அளித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் ஏற்கனவே பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் தற்போது மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள “தளபதி 69” படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த திரைப்படமானது மீண்டும் யுவன் சங்கர் ராஜாவை தமிழ் திரையுலகில் முன்னிலைப்படுத்தும் என்று ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வரும் வேளையில் இந்த படத்திற்கான இசையமைப்பினை பிரம்மாண்டமாக மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் தற்போது யுவன் சங்கர் ராஜா ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள அவரது ஒரு டிவிட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. ஏனெனில் அதில் யுவன் சங்கர் ராஜா குறிப்பிட்டதாவுது : என்னுடைய அடுத்த பெரிய பாடலுக்கு நான் எந்த இசையமைப்பாளர் உடன் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? அப்படி நான் இணைய வேண்டிய அந்த இசையமைப்பாளரின் பெயரை நீங்களே கீழே பதிவிடுங்கள் அதைச் செய்வோம் என்று ரசிகர்களிடம் அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

அந்த வகையில் அடுத்ததாக தளபதி 69 படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை அவர் ரசிகர்கள் அளிக்கும் பதிலை வைத்து ஒரு இசையமைப்பாளருடன் சேர்ந்து பாடவோ அல்லது இசையமைக்கவோ உள்ளார் என்று தெரிகிறது. ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பாடியுள்ள வேளையில் தற்போது அவர் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளதால் நிச்சயம் தளபதி 69 படத்தில் ஒரு பெரிய சம்பவம் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்