தமிழ் சினிமாவில் “குத்து” திரைப்படத்தின் மூலம் குத்து ரம்யாவாக அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா. இவர் ஒரு கன்னட நடிகை ஆவார். கன்னட சினிமாவில் ஒரு டாப் நடிகையாக வலம் வந்தவர் இவர்.
தமிழில் தனுஷ் நடித்த “பொல்லாதவன்” திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதே போல் சூர்யாவின் “வாரணம் ஆயிரம்” திரைப்படத்திலும் நடித்திருந்தார். பின்னாளில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட திவ்யா, நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு திவ்யா ஸ்பந்தனா இறந்துவிட்டார் என்று செய்திகள் பரவியது. இதனை தொடர்ந்து பல முன்னணி செய்தி நிறுவனங்களும் இந்த செய்தியை பரப்பத் தொடங்கிவிட்டனர். ரசிகர்களும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் இரங்கல் தெரிவிக்க தொடங்கிவிட்டனர்.
ஆனால் அதன் பின் தற்போது திவ்யா ஸ்பந்தனாவின் தோழி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “இப்போதுதான் திவ்யாவிடம் பேசினேன். அவர் நலமாக இருக்கிறார்” என டிவிட் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் இறந்துவிட்டதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என தெரிய வருகிறது.
திவ்யா ஸ்பந்தனா இறந்துவிட்டதாக வெசெய்தி வெளியிட்ட முன்னணி செய்தி சேன்னல்களும் அந்த செய்திகளை நீக்கிவிட்டனர். இவ்வாறு கொஞ்ச நேரத்திற்குள் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துவிட்டனர் மீடியாக்கள்.
இதனால் ரசிகர்கள் மீடியாக்களின் மேல் கடும் கோபத்தில் இருக்கின்றனர். கொஞ்சன் கூட பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறார்கள் எனவும் உண்மை நிலையை ஆராய்ந்து செய்தி வெளியிடுங்கள் எனவும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு புரளியை யார் கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை.





