இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் படம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. திரையுலக மார்க்கண்டேயன் என அழைக்கப்படும் மூத்த நடிகர் சிவக்குமாரின் இளைய மகன், மூத்த மகன் நடிகர் சூர்யாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சூர்யாவுக்கும் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் கார்த்தி நடிப்பில் இதுவரை 26 படங்கள் வெளிவந்துள்ளன. அவரது நடிப்பில் 25வது படமாக வெளிவந்த ஜப்பான் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கிய மெய்யழகன் படம் கார்த்திக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
கார்த்தி நடித்த படங்களில் பல படங்கள் பெரிய அளவில் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. அதில் சர்தார் படம் மிக முக்கியமானது. கடந்த 2022ம் ஆண்டில் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. இந்த படத்தில் அப்பா மகன் என 2 வேடங்களில் நடிகர் கார்த்தி நடித்திருந்தார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான சர்தார் படத்தை இயக்குனர் பி எஸ் மித்ரன் எழுதி இயக்கியிருந்தார். இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஷிஜா விஜயன், ரித்விக், சங்கி பாண்டடே, யூகி சேது, அவினாஷ், கேமியா கேரக்டரில் லைா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் பாலாஜி சக்திவேல் நடித்திருந்தார். இந்தி நடிகர் சங்கி பாண்டே இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிகை லைலா ரீ என்ட்ரி இந்த படத்தில் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2022ம் ஆண்டில் ரூ. 100 கோடி வசூலித்த படங்களில் சர்தார் படமும் ஒன்றாகும்.
இந்நிலையில் சர்தார் 2 படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. இதில் நடிகர் எஸ்ஜே சூர்யா, சீன உளவாளி கேரக்டரில் நடிக்கிறார். இதனால் சீனரை போன்ற தோற்றத்தில் எஸ்ஜே சூர்யா கெட்டப் மாற்றப்பட்டு, அதே போன்ற முகத்தோற்றத்தில் மேக்கப்பில் நடித்து வருகிறார். பார்ப்பதற்கு திடீரென புரூஸ்லி போல அவர் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதால் பலரும் பலத்த ஆச்சரியமடைகின்றனர். மார்க் ஆண்டனி, மாநாடு போல இதிலும் எஸ்ஜே சூர்யா வேற லெவலில் பெர்பாமென்ஸ் காட்டுவார் என தகவல் வெளியாகி உள்ளது.





