- Advertisement -
Homeபொழுதுபோக்குஜூலை 28 தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக வெளியான நற்செய்தி - அடுத்த அறிவிப்பு இதோ

ஜூலை 28 தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக வெளியான நற்செய்தி – அடுத்த அறிவிப்பு இதோ

- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்த தகவலே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த படத்தின் டீசரானது தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28-ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து தனுஷின் ஐம்பதாவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அதனை தனுஷ் இயக்கி தானே நடிக்க இருப்பதாகவும் போஸ்டர் வெளியிடப்பட்டு அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேலும் ஏற்கனவே தனுஷ் ஐம்பதாவது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கியதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூலை 28-ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது அவரது ரசிகர்களுக்காக மிக முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 51-வது படம் குறித்த தகவல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.

அதன்படி தனுஷின் 51-வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா என்பவர் இயக்க உள்ளதாகவும் அந்தப் படத்திற்கான போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த போஸ்டரில் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி, இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்