- Advertisement -
Homeபொழுதுபோக்குஐகான் ஸ்டாருக்கு வாழ்த்து சொல்லி அட்டென்ஷன் கொடுத்த ரஜினி பட நடிகை - தெலுங்குல ஒரு...

ஐகான் ஸ்டாருக்கு வாழ்த்து சொல்லி அட்டென்ஷன் கொடுத்த ரஜினி பட நடிகை – தெலுங்குல ஒரு ரவுண்டு வர ஆசையா? கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜூன் ஐகான் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். புஷ்பா படம் தந்த அபரிதமான வெற்றியால், இந்தியா முழுவதும் கவனம் பெற்ற ஒரு நடிகராக மாறிய அவருக்கு, சிறந்த நடிகர் தேசிய விருது கொடுத்து மத்திய அரசு கவுரவித்தது. தற்போது புஷ்பா 2 படம், வருகிற 5ம் தேதி உலகம் முழுவதும் 12 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சுனில், பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில், பின்னணி இசை சாம் சிஎஸ் அமைத்துள்ளார். ஆனால் புஷ்பா முதல் பாகத்துக்கு பாடல்கள், இசை அனைத்துமே தேவி ஸ்ரீ பிரசாத்தே செய்திருந்தார்.

- Advertisement -

புஷ்பா 2 படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. புஷ்பான்னா பேர் இல்லே, புஷ்பான்னா பிராண்டு என்ற டயலாக் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் டிரண்டிங் ஆகி வருகிறது. புஷ்பா படத்தில் சமந்தா குத்தாட்டம் போலவே, 2ம் பாகத்தில் ஸ்ரீ லீலா குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில், சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்த நடிகை மாளவிகா மோகனன் தனது வலைதள பக்கத்தில், அல்லு அர்ஜூனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் எந்த அளவிற்கு பென்டாஸ்டிக் ஆக இருந்தார் என்பதிலேயே நான் அடித்துச் செல்லப்பட்டு விட்டேன்.

- Advertisement -

அவரது கம்பீரம், அவரது ஸ்டைல், அவரது நடனம் எல்லாமுமாக சேர்ந்து புஷ்பா 2 படத்தை நோக்கி ஆவலுடன் காத்திருக்க வைத்துவிட்டது. இது, தகிடாலே டைம் என்று மாளவிகா மோகன் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு, தேங்க்யூ டியர் அனைவருக்குமே இந்த படம் பிடிக்கும் என நம்புகிறேன் என்று அல்லு அர்ஜுன் பதில் அளித்துள்ளார்.

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, விஜய் நடித்த மாஸ்டர், விக்ரம் நடித்த தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன், சமீபத்தில் தெலுங்கில் முதன்முறையாக நடிகர் பிரபாஸூக்கு ஜோடியாக ராஜா ஷாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் தீவிரமாக களமிறங்கும் முயற்சியாக, அல்லு அர்ஜூனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் சொல்லி அவரது கவனத்தை தன் பக்கம் இழுக்கிறார் என்று ரசிகர்கள் கமணெ்ட் செய்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்