- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு அவரோட படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும், ஆனா அந்த படம் 2ம் பாகத்துல நான்...

எனக்கு அவரோட படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும், ஆனா அந்த படம் 2ம் பாகத்துல நான் நடிக்கலே – வெளிப்படையாக பேசிய ஆர்ஜே பாலாஜி!

- Advertisement -

கடந்த 29ம் தேதி வெளியான சொர்க்க வாசல் படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் நாயகன் ஆர்ஜே பாலாஜிக்கு இது மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. இதற்கு முன் அவர் ஹீரோவாக நடித்த எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் படங்கள் பெரிய வெற்றி பெற்றது. ஆனால் சிங்கப்பூர் சலூன் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

சிங்கப்பூர் சலூன் படத்துக்கு பிறகு இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் வெளியாகி உள்ள சொர்க்கவாசல் படம், சிறைக்கைதிகளின் வாழ்க்கை சம்பவங்களை கொண்டு உருவாகியுள்ளது. இதில் ஆர்ஜே பாலாஜியுடன் செல்வராகவன், பாலாஜி சக்திவேல், கருணாஸ், நட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, எனக்கு விசு படங்கள் ரொம்ப பிடிக்கும். அவரது குடும்ப படங்கள், எங்கள் குடும்பம் மாதிரியே எக்கச்சக்க பிரச்னைகளாக இருக்கும். அதை சிரித்து ஜாலியாக ஹேண்டில் பண்ணுவாங்க. டிவி சேனலில் பெரும்பாலான நேரங்களில் நான் படங்கள் பார்ப்பேன்.

அப்போது நிறைய விசு படங்கள் பார்த்திருக்கிறேன், சம்சாரம் அது மின்சாரம், குடும்பம் ஒரு கதம்பம், வேடிக்கை என் வாடிக்கை, வீடு மனைவி மக்கள் இப்படி விசு படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். அதனால் விசு படங்கள் எல்லாமே தெரியும். விசு படத்துல அடுத்தடுத்து வர்ற வசனம் எல்லாமே மனப்பாடமாக எனக்கு தெரியும்.

- Advertisement -

இதில் மணல் கயிறு என்ற ஒரு படத்தில் நடிகர் எஸ்வி சேகர் திருமணம் செய்துக்கொள்ள 10 கண்டிசன் போடுவார். அதெல்லாம் ரொம்ப ரசிக்கும் படியாக இருக்கும். மணல் கயிறு பார்ட் 2ல் எஸ்வி சேகர் மகன் அஸ்வின் நடித்தார். அந்த படத்தில் நானும் நடிக்க வேண்டியது.

அப்போ எஸ்வி சேகர் எனக்கு போன் பண்ணி சொன்னார். மலேசியாவோ, சிங்கப்பூர்லயோ ஷூட்டிங் நடக்குது, மணல் கயிறு பார்ட் 2ல் அஸ்வின் கூட நீயும் நடிக்கணும் என்று சொன்னார். சூப்பர் சார் என்று சொன்னேன். ஆனால் நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. ஆனால் மணல் கயிறு பர்ஸ்ட் பார்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று வெளிப்படையாக ஆர்ஜே பாலாஜி பேசி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்