- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசியில் அந்த லிஸ்ட்டில் நடிகர் விஜய் சேதுபதியும் சேர்ந்துட்டாரா, விரக்தியடைந்த கோலிவுட் வட்டாரம் - நீங்க...

கடைசியில் அந்த லிஸ்ட்டில் நடிகர் விஜய் சேதுபதியும் சேர்ந்துட்டாரா, விரக்தியடைந்த கோலிவுட் வட்டாரம் – நீங்க இப்படி ஒரு முடிவை எடுக்கலாமா ப்ரோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் அவர் இப்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் நித்யாமேனன் நாயகியாக நடித்துள்ளார். மிஷ்கின் வில்லன் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.

சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவுக்குள் வந்து ரஜினி, அஜீத்குமார் போல சாதித்த நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் துணை நடிகராக சில படங்களில் விஜய் சேதுபதி நடித்திருப்பார். குழுவில் ஒருவராக அவரும் இருப்பார். அப்போது படம் பார்த்த ரசிகர்களுக்கு விஜய் சேதுபதியை தெரியாது. ஆனால் இப்போது புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களை பார்க்கும் போது அடடா விஜய் சேதுபதியா இது என்று கேட்கத் தோன்றுகிறது.

- Advertisement -

அப்படி அடிமட்டத்தில் இருந்து தினமும் ரூ. 250 ரூபாய் சம்பளத்தில் துணை நடிகராக இருந்த விஜய் சேதுபதியை, தென்மேற்கு பருவக்காற்று படம் மூலமாக நாயகனாக மாற்றியவர் இயக்குனர் சீனு ராமசாமி. அதன்பிறகு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா சூது கவ்வும் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிறகு தர்மதுரை, காதலும் கடந்து போகும், நானும் ரவுடிதான், கருப்பன், காத்து வாக்குல ரெண்டு காதல், நல்ல நாள் பார்த்து சொல்றேன், ஆண்டவன் கட்டளை போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இதில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கும், பேட்ட படத்தில் விஜய்க்கும், விக்ரம் படத்தில் கமலுக்கும், ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கும் வில்லனாக நடித்து விஜய் சேதுபதி வேற லெவலில் பாராட்டை பெற்றார்.

- Advertisement -

விஜய் சேதுபதியை பொருத்த வரை வந்த பாதை மறக்காதவர். தன் வாழ்க்கையில் உதவியவர்களுக்கு, மீண்டும் உதவும் எண்ணம் கொண்டவர். அதனால் தனது ஆரம்ப கால வளர்ச்சிக்கு உதவிய பலருக்கு மீண்டும் அவர் உதவி செய்திருக்கிறார். இதுவரை உதவியும் வந்திருக்கிறார். ஆனால் இனிமேல் மீண்டும் தனது படங்களை இயக்கும் வாய்ப்பு தந்து உதவப் போவதில்லை என்ற அதிரடி முடிவை அவர் எடுத்திருக்கிறார்.

அதாவது தொடர்ந்து தோல்வி படங்களை தந்த விஜய் சேதுபதிக்கு, மகாராஜா படம் மூலம் கம்பேக் கிடைத்துள்ளது. இப்போது மீண்டும் ஒரு ரவுண்டு வர அவர் ஆரம்பித்துள்ளார். இந்த நேரத்தில் பழைய நண்பர்களுக்கு இயக்குனர்களுக்கு தனது படங்களை இயக்கும் வாய்ப்பை தந்து, அதை உதவியாக செய்து மீண்டும் தன் வெற்றிப் பயணத்தை கெடுத்துவிட வாய்ப்புள்ளதால் இந்த அதிரடி முடிவை அவர் எடுத்திருக்கிறார். சினிமாவில் இப்படி நன்றி மறக்காமல் உதவும் நபர்கள் லிஸ்ட்டில் இருப்பதே கொஞ்சம் பேர்தான். அதில் இருந்து விஜய் சேதுபதியும் விலகி விட்டதால் கோலிவுட் வட்டாரம் விரக்தியில் உள்ளது.

- Advertisement -

சற்று முன்