- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனியாவது பழைய ஃபார்முக்கு திரும்பி வருவாரா ஜெயம் ரவி? ஜீனி படம் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட்...

இனியாவது பழைய ஃபார்முக்கு திரும்பி வருவாரா ஜெயம் ரவி? ஜீனி படம் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் – இந்த படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜெயம் படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ரவி. இந்த படம் அபார வெற்றி பெற்றதால் ஜெயம் ரவி என்ற பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. எடிட்டர் மோகனின் இளைய மகன், டைரக்டர் மோகன் ராஜாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் படத்தை தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படமும் ஜெயம் ரவிக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.

தொடர்ந்து தனி ஒருவன், போகன், உனக்கும் எனக்கும், பேராண்மை, சந்தோஷ் சுப்ரமணியம், அடங்க மறு, வனமகன், டிக் டிக் டிக் என பல வெற்றிப் படங்களை தந்து முன்னணி நாயகனாக வலம் வந்தவர் ஜெயம் ரவி. ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு அவரது படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. இதனால் அவர் தனது சினிமா பயணத்தில் பெரிய பின்னடவைச் சந்தித்தார்.

- Advertisement -

குறிப்பாக மிருதன், இறைவன், அகிலன், சைரன் 108 ஆகிய படங்கள் பலத்த தோல்வியடைந்த நிலையில், கடந்த தீபாவளிக்கு வெளியான பிரதர் படமும் பெரிய ஏமாற்றத்தை தந்தது. ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி போன்ற சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கிய பிரதர் படம் இவ்வளவு மோசமாக தோல்வியடையும் என ரசிகர்களே எதிர்பார்க்கவில்லை.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை உதயநிதி மனைவி கிருத்திகா டைரக்ட் செய்துள்ளார். தேசிய விருது பெற்ற நடிகை நித்யாமேனன் நாயகியாக நடித்துள்ளார், இந்த படம் நிச்சயமாக ஒரு நல்ல வெற்றியை ஜெயம் ரவிக்கு தரலாம் என்று ரசிகர்கள் பலமாக நம்பியுள்ளனர்.

- Advertisement -

இதற்கிடையே ஜெயம் ரவி நடித்துவரும் ஜீனி படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வந்துள்ளது. புதுமுக இயக்குனர் அர்ஜுனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் ஜீனி என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். ஜீனி படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் பட நிறுவனமான வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது இந்நிறுவனத்தின் 25வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜீனி படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி ஆகிய 3 பேர் நாயகிகளாக நடித்துள்ளனர். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விரைவில் துவங்க இருக்கின்றன. ஜீனி படத்தை வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்