- Advertisement -
Homeபொழுதுபோக்குஃபேஸ்புக்கில் காதலித்து ஏமாந்த மனிஷா கொய்ராலா, ஆனால் சத்தமே இல்லாமல் செய்த துணிகர காரியம், வேற...

ஃபேஸ்புக்கில் காதலித்து ஏமாந்த மனிஷா கொய்ராலா, ஆனால் சத்தமே இல்லாமல் செய்த துணிகர காரியம், வேற லெவல்

- Advertisement -

நேபாள நாட்டின் அரச பரம்பரையை சேர்ந்த மனிஷா கொய்ராலா “சௌதகர்” என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவிற்கு அறிமுகமானார். ஹிந்தியில் அழகு பதுமையாக வலம் வந்த மனிஷா கொய்ராலா, மணிரத்னத்தின் “பம்பாய்” திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரத் தொடங்கினார். இவ்வாறு தமிழ், ஹிந்தி என மாறி மாறி பல திரைப்படங்களில் நடித்து வந்த மனிஷா கொய்ராலா இந்திய சினிமாவின் டாப் நடிகையாக உருவானார். ஆனால் ஒரு கட்டத்தில் மனிஷா கொய்ராலாவின் மார்க்கெட் சற்று சரிந்தது. ஆதலால் பட வாய்ப்புகளும் குறைந்துபோனது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, மனிஷா கொய்ராலா குறித்த பல அரிய தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது மனிஷா கொய்ராலா தனக்கு வந்த புகழை கையாளத் தெரியாமல் இருந்தாராம். அது அவரை மது பழக்கத்துக்கு கொண்டு சென்றுவிட்டதாம். அதன் பின் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு மனிஷா கொய்ராலா ஓரளவு மது பழக்கத்தில் இருந்து மீண்டு வந்தாராம்.

- Advertisement -

அதன் பின் ஃபேஸ்புக்கில் ஒரு நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டாராம். ஆனால் சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்தனராம். அதனை தொடர்ந்து மனிஷா கொய்ராலாவை புற்று நோய் தாக்கியுள்ளது. அதன் பின் தனது புற்றுநோயுடன் போராடி மீண்டு வந்தார்.

அதே போல் தனது சொந்த நாடான நேபாளில் பெண்களை கடத்தி பாலியல் தொழிலுக்குள் தள்ளும் கொடுமை நடந்துகொண்டிருந்ததால், அதனை தடுக்க அந்நாட்டு காவல்துறையுடன் இணைந்து மனிஷா கொய்ராலா செயல்பட்டாராம். அதே போல் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து நேபாளத்திற்குள் அகதிகளாக வருபவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்தாராம்.

- Advertisement -

மேலும் பெண்களுக்கு இலவசமாக சேனிட்டரி நாப்கின் வழங்கும் விதமாக ஒரு சொந்த தொழிற்சாலையையே நடத்தி வந்தாராம் மனிஷா. இவ்வாறு மனிஷா கொய்ராலா குறித்து யாரும் அறியாத தகவல்களை அந்த பேட்டியில் செய்யாறு பாலு பகிர்ந்துகொண்டார்.

- Advertisement -

சற்று முன்