- Advertisement -
Homeபொழுதுபோக்குஸ்ருதிஹாசன் நடிக்க வேண்டிய அந்த கேரக்டரை பறித்துக்கொண்ட நடிகை நயன்தாரா - இது உருட்டு இல்லீங்க…...

ஸ்ருதிஹாசன் நடிக்க வேண்டிய அந்த கேரக்டரை பறித்துக்கொண்ட நடிகை நயன்தாரா – இது உருட்டு இல்லீங்க… நடந்த உண்மைதான்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனுக்கு ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் என 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தில் நாயகியாக அறிமுகமானார். நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில் ஸ்ருதிஹாசனுக்கு நடிப்பதற்காக நிறைய வாய்ப்பை இயக்குனர் கொடுத்திருந்தார்.

அடுத்து தனுஷூடன் 3 என்ற படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இந்த படம் படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து விஜயுடன் புலி, விஷாலுடன் பூஜை, அஜீத்குமாருடன் வேதாளம் உள்ளிட்ட படங்களில் ஸ்ருதிஹாசன் நடித்தார். தமிழில் பெரிய வரவேற்பு இல்லாததால் தெலுங்கில் நிறைய படங்களில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

- Advertisement -

இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் முக்கிய கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் ஒரு முக்கியமான வெற்றி படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க கமிட் ஆன நிலையில், அந்த படத்தில் அவருக்கு பதிலாக நடிகை நயன்தாரா நடித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் மூக்குத்தி அம்மன் கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தார். இதில் ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்திருந்தார். ஊர்வசி, மௌலி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

இப்போது மூக்குத்தி அம்மன் 2ம் பாகமாக உருவாகிறது. ஆனால் இந்த 2ம் பாகம் படத்தை இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கவில்லை. அவருக்கு பதிலாக இயக்குனர் சுந்தர் சி இயக்குகிறார். இந்த படத்திலும் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்கிறார். முதல் பாகத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமே மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தையும் தயாரிக்கிறது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, மூக்குத்தி அம்மன் படத்தில் மூக்குத்தி அம்மனாக முதலில் நடிக்க இருந்தது ஸ்ருதிஹாசன்தான்.அவரிடம் நான் கதை சொல்லி, அவரும் ஓகே சொல்லி விட்டார். அப்போது ஒருமுறை விக்னேஷ் சிவனை நான் நேரில் சந்தித்த போது, யார் யாருக்கோ கதை சொல்றே, நயன்தாராவுக்கு கதை சொல்ல மாட்டியா என்று என்னிடம் கேட்டார். பிறகு நயன்தாராவின் வீட்டுக்குச் சென்று அவரிடம் கதை சொன்ன போது, பாதி கதையை கேட்ட போதே நயன்தாரா, ஓகே சொல்லி விட்டார், என்று ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்