தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். எம்ஜிஆர் ரஜினிக்கு பிறகு தமிழ்நாட்டில் பெரிய அளவில் ரசிகர்களின் அன்பை, அபிமானத்தை பெற்றவராக விஜய் இருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் மக்களின் ஆதரவையும் ஓட்டுகளாக பெற இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.
ஆரம்பத்தில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் மகன் என்ற அடையாளம் மட்டுமே விஜய்க்கு இருந்தது. ரசிகன் படத்தை விமர்சித்த பிரபல வார இதழ், விஜய் குறித்து உருவக்கேலி செய்தது. ஆனால் காதலுக்கு மரியாதை வெற்றிக்கு பிறகு அந்த பிரபல இதழே, விஜயை தங்களது பத்திரிகையில் அவரது வாழ்க்கை தொடரை எழுத வைத்தது.
விஜயை போலவே அவரது மகன் ஜேசன் சஞ்சய், சினிமா நடிகராக வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவரது தனது தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போல, இயக்குனராக தன் கேரியரை தீர்மானித்துள்ளார். இதற்காக ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் காட்டி இருக்கிறார்.
முதலில் சில குறும்படங்களை தனது நண்பர்களுடன் சேர்ந்து இயக்கி அவர், பிறகு வெளிநாட்டில் டைரக்சன் தொடர்பான படிப்புகளையும் படித்து முடித்து நாடு திரும்பியுள்ளார். இப்போது லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் சந்தீப் குமார் நாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தை ஜேசன் சஞ்சய் இயக்க தயாராகி உள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இதற்கிடையே தனது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக விஜய் தரப்பில் ஆரம்பத்தில் போதிய வரவேற்போ, ஆதரவோ இல்லை. மகனின் இந்த விருப்பத்தில் விஜய்க்கு விருப்பம் இல்லை என்றே ஆரம்பத்தில் தெரிய வந்தது. ஏனெனில் லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குனராக கமிட் ஆன நிகழ்ச்சியில் கூட விஜய் பங்கேற்கவில்லை.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு தனது மகனின் விருப்பத்துக்கு குறுக்கே நிற்க வேண்டாம் என விஜய் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அதே நேரத்தில், விஜய் சில முக்கியமான அறிவுரைகளை மகனுக்கு கூறியிருக்கிறார். உன்னுடைய கனவுகளில் நீ ஜெயிக்க வேண்டும் என்றால், அதற்கான உழைப்பை நீ தர வேண்டும். பொறுமையாக காத்திருக்க வேண்டும். என்ன மாதிரியான ரிசல்ட் வந்தாலும் அதை நீ ஏற்றுக்கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.





