- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் படத்தில் நடிக்க சம்பளம் 25 லட்சம் ரூபாய், அந்த படத்தில் நடிக்க 2...

என் படத்தில் நடிக்க சம்பளம் 25 லட்சம் ரூபாய், அந்த படத்தில் நடிக்க 2 லட்சம் வாங்கறீங்க, என்ன சார் இது என நடிகர் மம்முட்டியை கேள்வி கேட்ட இயக்குனர் ஆர்கே செல்வமணி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் ஆர்கே செல்வமணி. புலன் விசாரணை கேப்டன் பிரபாகரன் செம்பருத்தி அதிரடிப்படை ராஜமுத்திரை மக்கள் ஆட்சி அடிமை சங்கிலி ராஜஸ்தான் அரசியல் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இவர் நடிகை ரோஜாவின் கணவர். தற்போது பெப்சி அமைப்பின் தலைவராக இருக்கிறார்.

மலையாள சினிமாவில் 70 வயதுகளை கடந்தும் கொண்டாடப்படும் ஒரு சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மம்முட்டி. இப்பவும் சிறப்பான கேரக்டர்களில் தனது ஆளுமை மிக்க நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்த ஆண்டில் வெளியான பிரமயுகம் படத்தில் அவரது கேரக்டர் மிரட்டியது.

- Advertisement -

நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் ஒரு சிறந்த நடிகராக வளர்ந்து வருகிறார். அவரது நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளியான லக்கி பாஸ்கர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அப்பாவை போல மகனும் சிறந்த படங்களை, சிறந்த கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

நடிகர் மம்முட்டி தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தளபதி கிளிப்பேச்சு கேட்கவா அழகன் ஆனந்தம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் எதிரும் புதிரும் அரசியல் மறுமலர்ச்சி மக்கள் ஆட்சி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ஒரு நேர்காணலில் மம்முட்டி நடித்த மக்கள் ஆட்சி அரசியல் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்கே செல்வமணி கூறியதாவது, ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்றவர்கள் சேர் எடுத்து போட்டால், இப்படி எல்லாம் பண்ணி என்னை கெடுத்துடாதீங்க என்று சொல்லிவிட்டு அவரே சேர் எடுத்துப் போட்டுக்கொண்டு அமர்வார். அவர் வீட்டில் இருந்தே அவருக்கு சாப்பாடு வந்துவிடும். காஸ்ட்யூம் என்னவோ அதை போட்டுக்குவார். காஸ்ட்யூமை திருப்பிக்கொடுத்த ஒரே ஹீரோ அவர்தான்.

மேக்கப் மேன் சம்பளம், டிரைவர் பேட்டா எல்லாம் அவரே கொடுத்துவிடுவார். தயாரிப்பாளருக்கு எந்த சிரமத்தையும் தர மாட்டார். அரசியல் என்ற என்னுடைய படத்தில் நடிக்க அவருக்கு நான் 25 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தேன். ஆனால் அதே நேரத்தில் மற்றொரு மலையாள படத்துக்கு அவர் 2 லட்சம் ரூபாய்தான் சம்பளம் வாங்கினார். என்ன சார் எனக்கு 25 லட்சம், அவருக்கு 2 லட்சம் என்று கேட்டேன். அதற்கு அவர் செல்வமணி, அந்த படம் அவ்வளவுதான், அந்த கதை அவ்வளவுதான். அந்த படம் கமர்ஷியலா ஓடாது. அது ஒரு ஆர்ட் படம். 25 நாள்தான் கால்ஷீட் என்று கூறினார். அப்படிப்பட்ட சிறந்த கலைஞர் மம்முட்டி என ஆர்கே செல்வமணி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்