கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்து சீதாராமம் உள்ளிட்ட சில படங்களில் ராஷ்மிகா நடித்திருந்த நிலையில், அடுத்து புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார்.
இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் செம்மரக் கடத்தல் கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் ஸ்ரீ வள்ளி கேரக்டரில் ராஷ்மிகா மந்தனா நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பாடல் காட்சிகளில் அவரது நடனம், கவர்ச்சி ரசிகர்களை வேற லெவலில் ரசிக்க வைத்தது.
புஷ்பா படம் தந்த அதிரடி வெற்றிக்கு பிறகு விஜயுடன் வாரிசு, கார்த்தியுடன் சுல்தான் போன்ற படங்களில் ராஷ்மிகா நடித்தார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் தமிழில் ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடிக்க முடியாமல் போனது.
அதே நேரத்தில் பாலிவுட் பக்கம் சென்ற ராஷ்மிகா மந்தனா, அங்கு கவர்ச்சியில் இந்தி நடிகைகளுக்கே சவால் விட்டார். அனிமல் படத்தில் அவர் உதட்டு முத்தக் காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் மிக தாராளமாக நடித்து பாலிவுட் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்தார். எனினும் அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது புஷ்பா 2 படம் வெளியாகி உலகம் முழுவதும் சக்கைப்போடு போட்டு வருகிறது. முதல் நாளில் உலகளவில் ரூ. 275 கோடி வசூலித்த இந்த படம் பிறகு தினமும் வசூலில் அதிரடி காட்டியது. தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் வெளிநாடுகளிலும் வசூலில் அள்ளியது. படம் வெளியான 7 நாட்களில் புஷ்பா 2 படம் ரூ. 1000 கோடியை கடந்துள்ளது.
தற்போது இந்த படத்தில் நாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனா சம்பளம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி புஷ்பா படத்தில் நடித்த போது ராஷ்மிகா சம்பளம் ரூ. 2 கோடி, புஷ்பா 2 படத்தில் நடித்த போது அவரது சம்பளம் ரூ. 10 கோடி, இப்போது 1000 கோடி ரூபாய் வசூலை கடந்த ராஷ்மிகாவின் சம்பளம் ரூ. 15 கோடி முதல் ரூ. 16 கோடியாக உயர்த்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.





