தமிழ் சினிமாவின் மிக முக்கிய காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், ஒரு கட்டத்திற்கு பிறகு ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம்பிடித்து “தில்லுக்கு துட்டு”, “ஏ1”, “பிஸ்கோத்”, “பாரீஸ் ஜெயராஜ்” போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். சில திரைப்படங்கள் நன்றாக ஓடினாலும் சில திரைப்படங்கள் சரியாக போகவில்லை.

அதன் பின் ஒரு கட்டத்திற்கு பிறகு சந்தானம் சீரியஸ் கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். “ஏஜென்ட் கண்ணாயிரம்”, “குலு குலு” ஆகிய திரைப்படங்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். இந்த இரண்டு திரைப்படங்களும் படுதோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து சந்தானம் தனது டிராக்கை மாற்றி மீண்டும் தனது பழைய ஃபார்மை பிடிக்க “டிடி ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இத்திரைப்படத்திற்காக சந்தானம் வாங்கிய சம்பளத்தை குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சந்தானம் “டிடி ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்திற்காக ரூ.5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். இது சந்தானத்தின் அதிக பட்ச சம்பளமாக கூறப்படுகிறது. எனினும் “டிடி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தயாரிப்பாளருக்கு எந்த பங்கமும் விளைய வாய்ப்பில்லை என்று தெரிய வருகிறது.

“டிடி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களுக்கு ஒரு Fun Treat ஆக இத்திரைப்படம் அமைந்துள்ளது. அதே போல் இத்திரைப்படத்தில் பல காமெடி காட்சிகள் குபீர் சிரிப்பலைகளை உருவாக்குவதாக பலரும் பாராட்டி வருகின்றனர். சந்தானம் கெரியரில் ஒரு கம்பேக் திரைப்படமாக “டிடி ரிட்டர்ன்ஸ்’ அமைந்துள்ளதாக தெரிய வருகிறது.





