- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் இதற்குதான் ரஜினி ரொம்பவும் பயப்படுவார், அதனால் அவங்களுக்கு ஸ்பெஷல் மரியாதை கொடுப்பார் -...

ஷூட்டிங் ஸ்பாட்டில் இதற்குதான் ரஜினி ரொம்பவும் பயப்படுவார், அதனால் அவங்களுக்கு ஸ்பெஷல் மரியாதை கொடுப்பார் – சீக்ரட்டை போட்டுடைத்த நடிகர் பிரபுதேவா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பிரபுதேவா. சமீபத்தில் அவரது நடிப்பில் ஜாலியோ ஜிம்கானா என்ற படம் வெளியானது. துவக்கத்தில் பல படங்களில் ஹீரோக்களுக்கு நடன இயக்குனராக பிரபுதேவா பணிபுரிந்தவர். பிறகு ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். போக்கிரி, வில்லு போன்ற படங்களை இயக்கிய டைரக்டராகவும் வெற்றி பெற்றவர்.

நடிகர் பிரபுதேவா நடித்த ராசய்யா காதலன் லவ் பேர்ட்ஸ் காதலா காதலா வானத்தை போல 123 இந்து உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். துவக்கத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு, சின்ன ராசாவே சித்தெரும்பு என்னை கடிக்குது லாலாக்கு டோல் டப்பிமா போன்ற பாடல் காட்சிகளில் சிறப்பு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர் பிரபுதேவா.

- Advertisement -

நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத்குமார், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிசெய்தவர் பிரபுதேவா. அப்போது அவர்களுடன் நடனம் புரிந்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். அதிலும் நடிகர் ரஜினிகாந்த் குறித்து தனது நடன பணி அனுபவங்களை நடன இயக்குனர், நடிகர் பிரபுதேவா பகிர்ந்துள்ளார். அதுவும் பாடல் காட்சிகளில் அசத்தும் ரஜினிக்கு இப்படி ஒரு பிரச்னையா என்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நேர்காணல் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து நடன இயக்குனர், நடிகர் பிரபுதேவா கூறியதாவது, ரஜினி டான்ஸ் ஆடினால் எல்லாருக்குமே பிடிக்கும். நல்லா தான் நடந்துட்டு இருப்பார். ஜாலியாக இருப்பார். ஆனா டான்ஸ் என்று சொன்னால் ரோபோ மாதிரி ரொம்பவும் பயந்துடுவார்.

- Advertisement -

ஒவ்வொரு காலிலும் 20 கிலோ, 20கிலோ கயிறு கட்டிவிட்டால், எப்படியோ அந்த மாதிரி ஆகி விடுவார். சாங் என்றவுடனே அவருக்கு ஒரு பயம் வந்துவிடும். சார், உங்க இஷ்டத்துக்கு பண்ணுங்க, என்று நாங்க சொன்னாலும் டைமிங் பண்ணனுமேங்கிற அந்த கவலை, நடுக்கம், அவருக்கு பயம் போகாது.

அதனாலேயே டான்ஸ் மாஸ்டர்கள் மீது அவருக்கு தனி மரியாதை உண்டு. ரொம்பவும் ரெஸ்பெக்ட் தந்து நடந்துக்குவார். ஆனால் அவருக்கு பாடல் காட்சி பயமாக இருந்தாலும், ரசிகர்கள் அவரது பாடல்களை தான் ரொம்பவும் விரும்பறாங்க, என்று அந்த நேர்காணலில் கோபிநாத்திடம் நேரடியாக நடன இயக்குனர் பிரபுதேவா கூறியிருக்கிறார். நடன காட்சிகள் என்றால் ரஜினிக்கு அவ்வளவு பயமா என்று ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்