நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகிறது. லைகா ப்ரொடக்rன் தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக நடித்துள்ளார். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார்.
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 20ம் தேதி சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடந்தது. வேட்டையன் படத்தில் ரஜினியுடன் மஞ்சு வாரியார், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரக்சன் அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பின்னணி பேசியிருக்கிறார்.
வருகிற அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இந்த படம் குறித்த பெரும்பாலான தகவல்கள் வெளியான நிலையில் வேட்டையன் குறித்த சுவாரஸ்யம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில், நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய தர்பார் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் படுதோல்வி அடைந்தது.
அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் இரண்டு விதமான கேரக்டர்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார். ஒன்று கபாலி, காலா, கூலி போன்ற படங்களில் தாதா கேரக்டரில் நடிக்கிறார். இல்லையென்றால் தர்பார், ஜெயிலர், வேட்டையன் என போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார். போலீஸ் அல்லது தாதா என இந்த இரண்டு கேரக்டர்கள் தவிர வேற கேரக்டரில் நடித்தால் மாஸ் காட்ட முடியாது. ரசிகர்கள் மத்தியில் எடுபடாது என்பதால் ரஜினி இப்படி நடித்து வருகிறார்.
இப்படி இரண்டு கேரக்டர்களை மட்டுமே நம்பி சினிமாவில் ரஜினி நடிப்பது ரசிகர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் வேட்டையன் படத்தில், என்கவுண்டர் தேவை என்று ஒரு தரப்பும் என்கவுண்டர் தேவை இல்லை என்று ஒரு தரப்பு தான் வாதிடுகிறது. இது ஏற்கனவே தூக்கு தண்டனை தேவையா, தேவையில்லையா என்று இருதரப்பு வாதிட்டதை போலவே இருக்கிறது.
ஒரு விஷயத்தை இரண்டு விதமாக சொல்லும் ஒரு கான்செப்ட் ஆகத்தான் வேட்டையன் படத்தின் கதையும் இருக்கிறது. இதுவும் லால் சலாம் போல டாக்குமெண்டரி படமாக இருக்குமோ என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. மேலும் படத்தின் டீசர் பார்த்த பலருக்கும், வேட்டையன் பாதி படம் பார்த்த ஒரு மனநிலை வந்துவிட்டது. இனி டிரெய்லரும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதால், மீதி படத்தையும் பார்த்துவிடலாம் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வேட்டையன் படத்தின் டிரெய்லர் வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.





