- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் இன்னொரு கார்த்திக் என பெயர் வாங்கிய நடிகர் சிம்பு, திடீரென இப்படி மாறியது...

தமிழ் சினிமாவில் இன்னொரு கார்த்திக் என பெயர் வாங்கிய நடிகர் சிம்பு, திடீரென இப்படி மாறியது எப்படி? – குதூகலிக்கும் எஸ்டிஆர் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் சிலம்பரசன் குறித்து கடந்த 1990களில் பல புகார்களும், குற்றச்சாட்டுகளும் இருந்தன. குறிப்பாக தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் சிலம்பரசன் ஒரு கட்டத்தில் பாடாய்ப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சிம்புவுக்கு வம்பு நடிகர் என்ற பெயரே அப்போது இருந்தது.

அதாவது குறிப்பிட்ட நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வரமாட்டார். அவரை போனில் தொடர்பு கொண்டால், போனிலும் கிடைக்க மாட்டார். வெளியூர்களில், வௌிநாடுகளில் ஷூட்டிங் நடந்தால், ஓட்டல் அறையில் தூங்கி விட்டு மிக தாமதமாக ஷூட்டிங் வருவார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனருடன் அடிக்கடி முரண்பட்டு வெளியேறி விடுவார் என பல புகார்கள் இருந்திருக்கின்றன.

- Advertisement -

அந்த வகையில் நவரச நாயகன் கார்த்திக்கும், சிம்புவும் ஒன்றுதான். அவரை போலவே இவரும் தயாரிப்பாளர்களை, இயக்குனர்களை மதிப்பதில்லை. அவரும் ஷூட்டிங் வராமல் இயக்குனர்களை கஷ்டப்படுத்துவார். தயாரிப்பாளர்களை அவமரியாதை செய்வார். அவரும் இவரும் சீனியர், ஜூனியர் போல இருப்பதாக பலரும் விமர்சித்து கூறியதுண்டு.

ஆனால் இப்போது சிலம்பரசனின் செயல்பாடுகளில் முற்றிலும் மாற்றம் தெரிகிறது. உதாரணமாக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் அவர் நடித்த தக்லைப் படத்தில், குறிப்பிட்ட நாட்கள் கால்ஷீட் தந்து அந்த நாட்களில் சரியான நேரத்தில் ஷூட்டிங் வந்து நடித்து கொடுத்திருக்கிறார். காலை 6 மணிக்கு கூட ஷூட்டிங்குக்கு நேரம் தவறாமல் வந்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி, சிங்கப்பூரில் நடந்தது. அதில் கலந்துக்கொண்ட சிம்பு, பலவிதங்களில் அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து இறங்கியவுடன், நிகழ்ச்சி நிரல்படி எல்லாவற்றிலும் சிம்பு கலந்துக்கொண்டிருக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பு, பிரமோ, இசை நிகழ்ச்சி என எல்லாவற்றிலும் குறிப்பிட்ட நேரத்தில் முதல் ஆளாக சிம்பு வந்துள்ளார்.

அவருடைய நேரம் தவறாமை, செயல்பாடுகளில் காட்டும் தீவிரம் ஆகியவற்றை பார்த்துதான், மற்ற நாடுகளில் அவரை இசை நிகழ்ச்சி நடத்துமாறு பலரும் அவரை வற்புறுத்தி உள்ளனர். இதற்கு முக்கிய காரணம், நடிப்பு, திறமை இருந்தும் மோசமான ஆட்டிட்யூட்டால் இதுவரை வாங்கிய கெட்ட பெயர் போதும், இனிமேல் சினிமாவில் நல்ல பெயர் எடுப்போம் என்று அவர் தீர்மானித்து விட்டதால்தான், இப்படி அவர் மாறி விட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்