- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு, என்னப்பா இப்படி சொல்லிட்டாங்க என...

புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு, என்னப்பா இப்படி சொல்லிட்டாங்க என புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில், கடந்த 5ம் தேதி வெளியான படம் புஷ்பா 2. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் 275 கோடி ரூபாய் வசூலித்தது. மொத்தம் 12 ஆயிரம் தியேட்டர்களில் புஷ்பா 2 ரிலீஸானது. ஐமேக்ஸ் திரைகளில் அதிக எண்ணிக்கையில் வெளியான இந்திய படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 7 நாட்களில் புஷ்பா 2 படம், 1006 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்தது. இப்போது 2 வாரங்களில் 1508 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 72 கோடி ரூபாய் வரை புஷ்பா 2 படம் வசூலித்துள்ளதால், தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் வசூல் என்ற பாக்ஸ் ஆபீஸில் இணைந்து விடுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

கடந்த 2021ம் ஆண்டில் இயக்குனர் சுகுமாறன் இயக்கத்தில் புஷ்பா தி ரைஸ் என்ற பெயரில் வெளியான இந்த படம், தற்போது புஷ்பா தி ரூல் என்ற பெயரில் 2ம் பாகமாக வெளிவந்துள்ளது. அல்லு அர்ஜூன் நாயகனாகவும் ராஷ்மிகா மந்தனா சுனில் பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தில் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாட்டுக்கு நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டிருந்தார். அந்த பாடல் பெரிய அளவில் வைரலானது. இப்போது புஷ்பா 2ம் பாகத்தில் ஸ்ரீலீலா அல்லு அர்ஜூனுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார். இந்த பாடலும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வைரலாகி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் வருகிற ஜனவரி 9ம் தேதி புஷ்பா 2 படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக, கடந்த சில தினங்களாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து இப்போது புஷ்பா 2 படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமான ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 9ம் தேதி புஷ்பா 2 ரிலீஸ் ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் வௌியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், புஷ்பா 2 படம் ஓடிடி ரிலீஸ் குறித்து தவறான வதந்திகள் பரவி வருகின்றன. அந்த படத்தை இப்போது பெரிய திரையில் கண்டு மகிழுங்கள். 56 நாட்களுக்கு முன் எந்த ஓடிடி தளத்திலும் புஷ்பா 2 வெளியாகாது என்று தெளிவாக கூறியுள்ளது. அதாவது 8 வாரங்களுக்கு பின்பே புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் செய்யப்படும் என்பதை உறுதிபடுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்