- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனராக களம் இறங்கும் நடிகர் சரத்குமார், கதாநாயகி அவர்தானா? சூரியவம்சம் படம் குறித்தும் அப்டேட் தந்துட்டாரே?...

இயக்குனராக களம் இறங்கும் நடிகர் சரத்குமார், கதாநாயகி அவர்தானா? சூரியவம்சம் படம் குறித்தும் அப்டேட் தந்துட்டாரே? – வியந்துபோன ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் சரத்குமார். 1990களில் சூரியவம்சம், நாட்டாமை, நட்புக்காக போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்த அவர், சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை துவங்கினார். ஆனால் சினிமாவை போல் அரசியலில் அவரால் பெரிய இடத்தை அடைய முடியவில்லை.

பல ஆண்டுகளாக சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களை அவரது கட்சி சந்தித்து போட்டியிட்டாலும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் சரத்குமாருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் மட்டுமே கட்சி செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுவதும் மற்ற நேரங்களில் சினிமாவில் ஆர்வம் காட்டுவதும் சரத்குமாரின் வழக்கமாக உள்ளது.

- Advertisement -

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து சமக தேர்தலை சந்தித்தது. இதில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் தோல்வியடைந்தார். இதே தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் தோல்வியடைந்த நிலையில் திமுக கூட்டணி விருதுநகர் தொகுதியை கைப்பற்றியது.

ஷியாம், பிரவீன் இயக்கத்தில் உருவான படம் ஸ்மைல் மேன். இது சரத்குமார் நடிக்கும் 150வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிஜா ரோஸ் இனியா ராஜ்குமார் சார்ஜ் மரியான் சுரேஷ் மேனன் பேபி ஆலியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் பேசியதாவது, எடுக்கிற படம் நல்ல படமாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் படம் எடுப்பார்கள். யாரும் பிளாப் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படம் எடுப்பதில்லை. யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவது தவறு. நடிகர்களை தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்கிறார்கள். தேவையில்லை என்றால் கூத்தாடிகள் என்கின்றனர்.

எனக்கு எப்போதும் வயசே ஆகாது. இமயமலையில் இருக்கும் பாபாவிற்கு 4000 வயசு, 4000 வருஷம் பாபா இருக்கும்போது சரத்குமார் இருக்கக் கூடாதா, சூரியவம்சம் 2வது பாகம் பற்றி படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி அறிவிப்பார். தேசிய விருது வாங்கும் அளவிற்கு என் மனைவி ராதிகாவை வைத்து ஒரு படம் இயக்குகிறேன் என்று சரத்குமார் பேசியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்