- Advertisement -
Homeபொழுதுபோக்கு2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் வெளியாகும் 10 படங்கள்; இதில் அதிக கவனம்...

2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் வெளியாகும் 10 படங்கள்; இதில் அதிக கவனம் பெற்ற சரத்குமார், சமுத்திரக்கனி படங்கள் – வெற்றிக்கனி பறிக்குமா?

- Advertisement -

நடப்பாண்டை பொருத்த வரை தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படங்கள் எண்ணிக்கை மிக மிக குறைவுதான். அதிலும் 100 கோடி ரூபாய் வசூலை 10 படங்கள் கூட கடக்கவில்லை. அதே போல் விமர்சன ரீதியாக வெற்றிப் பெற்ற படங்களின் எண்ணிக்கை 20 என்ற எண்ணிக்கையை கூட தாண்டவில்லை.

அதிலும் குறிப்பாக 1000 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை மசாலாத்தனங்கள் நிறைந்த தெலுங்கு சினிமாக்களும், ஆக்சன், ஆபாசத்தை மையப்படுத்தி இந்தி படங்களும் வெகு எளிதாக கடந்துவிடும் சூழலில் இன்னும் தமிழ் படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை கடக்கவே முடியாமல் திணறி திண்டாடுகின்றன. இதில் ரஜினி, கமல், விஜய் படங்கள் மட்டுமே ஓரளவு நம்பிக்கை தருகின்றன.

- Advertisement -

அந்த வகையில் 2024ம் ஆண்டில் வெளியான தி கோட் அமரன் வேட்டையன் ஆகிய 3 படங்களும் முறையே 455 கோடி, 325 கோடி மற்றும் 265 கோடி ரூபாய் என வசூலில் சாதனை படைத்துள்ளது. மகாராஜா ராயன் அரண்மனை 4 கங்குவா இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் 200 கோடியை கூட கடக்கவில்லை.

இதில் விமர்சன ரீதியாக கங்குவா இந்தியன் 2 தங்கலான் போன்றவை தோல்வி படங்கள்தான். அதே நேரத்தில் ஸ்டார் வடக்குப்பட்டி ராமசாமி ப்ளு ஸ்டார் லவ்வர் டிமாண்டி காலனி 2 பிளாக் லப்பர் பந்து மெய்யழகன் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக ரசிகர்களின் கவனம் பெற்ற படங்களாக இருந்திருக்கின்றன.

- Advertisement -

இப்போது 2024ம் ஆண்டில் இறுதி மாதமான டிசம்பரில் கடைசி வாரத்தில் உள்ள சூழலில், வருகிற 27ம் தேதி மொத்தம் 10 படங்கள் ரிலீஸாகின்றன. இதில் நடிகர் சரத்குமார் நடித்த 150வது படம் தி ஸ்மைல் மேன் படமும், சமுத்திரக்கனி நடித்த திரு மாணிக்கம், ராஜா கிளி படங்களும் ரசிகர்களின் மத்தியில் கவனம் பெற்ற படங்களாக இருக்கின்றன.

மேலும் அலங்கு கூரன் மழையில் நனைகிறேன் நெஞ்சு பொறுக்குதில்லை இது உனக்கு தேவையா பீமா சிற்றுண்டி வாகை என 7 படங்கள் வெளியாகின்றன. தி ஸ்மைல் மேன், திரு மாணிக்கம், ராஜாகிளி என மொத்தம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் 10 படங்கள் வருகிற 27ம் தேதி ரிலீஸாகின்றன. இதில் 3 படங்கள் தவிர மற்ற 7 படங்களும் டைட்டில் பெயர்களே ரசிகர்கள் இப்போதுதான் அறியும்படியாக உள்ளன. இதில் எத்தனை படங்கள் வெற்றிக்கனி பறிக்கப் போகிறது என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்