- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன், அஜீத்குமார் கால்ஷீட் இப்போதைக்கு இல்லை; அதுவரை சும்மா இருக்க முடியுமா? அதிரடியாக களத்தில் இறங்கிய...

சிவகார்த்திகேயன், அஜீத்குமார் கால்ஷீட் இப்போதைக்கு இல்லை; அதுவரை சும்மா இருக்க முடியுமா? அதிரடியாக களத்தில் இறங்கிய வெங்கட்பிரபு – போட்றா வெடிய!

- Advertisement -

இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு ஆரம்பத்தில் சில படங்களில் நடித்தார். உன்னை சரணடைந்தேன் ஏப்ரல் மாதத்தில் சிவகாசி போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இசைஞானி இளையராஜாவின் தம்பி மகனாக இருந்தும் நடிப்பில் அவரால் ஜெயிக்க முடியவில்லை.

அதன்பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்த வெங்கட்பிரபு இயக்கிய முதல் படம் சென்னை 28 மிகப்பெரிய வெற்றியை பெற்றது. லோக்கல் இளைஞர்களின் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இந்த படம் ரசிகர்களிடம் ஜாலியான படமாக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சரோஜா கோவா சென்னை 28 படம் 2ம் பாகம் மாசு என்கிற மாசிலாமணி மங்காத்தா மாநாடு என ஹிட் பட்ஙகளை வெங்கட்பிரபு கொடுத்தார்.

- Advertisement -

அதிலும் அஜீத்குமாரின் 50வது படம் மங்காத்தா பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் வில்லன் கேரக்டரில் அசத்தியிருந்தார். படத்தின் பாடல்களும் ஹிட் ஆகி வெங்கட்பிரபுவுக்கு முன்னணி இயக்குனர் என்ற இமேஜை பெற்றுத் தந்தது. ஆனால் சூர்யா நடித்த மாஸ் படம் படுதோல்வியை சந்தித்தது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் பெரிய வெற்றியை பெற்றது. அதனால் லியோ படத்துக்கு பிறகு தனது 68வது படத்தை இயக்கும் வாய்ப்பை நடிகர் விஜய், வெங்கட்பிரபுவுக்கு தந்தார். தி கோட் படம் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாகி 445 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது.

- Advertisement -

இரட்டை வேடத்தில் விஜய் இந்த படத்தில் நடிப்பில் அதகளம் செய்திருந்தார். குறிப்பாக மகன் விஜய் வில்லன் கேரக்டரில் ரசிகர்களை மிரட்டியிருந்தார். இந்த ஆண்டில் வௌியான படங்களில் அதிக வசூலை பெற்ற முதல் படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் ( தி கோட்) என்பது குறிப்பிடத்தக்கது. அமரன், வேட்டையன் படங்கள் 2, 3வது இடங்களை பெற்றன.

இந்நிலையில் அடுத்து வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயன் படத்தை இயக்க இருந்த நிலையில், அவர் 2025ம் ஆண்டு இறுதி வரை காத்திருக்குமாறு கூறிவிட்டார். அஜீத்குமாரும் கார் பந்தயத்தில் இருப்பதால் அவரது கால்ஷீட்டும் தற்போதைக்கு வாய்ப்பில்லை. அதனால் இந்தி படம் இயக்க முடிவு செய்த வெங்கட்பிரபு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை சந்தித்து கதை சொல்லி இருக்கிறார். அவரும் ஓகே சொல்லிவிட்டதால், விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்