- Advertisement -
Homeபொழுதுபோக்குபடங்களுக்கு தடை கோரி அதிகரிக்கும் வழக்குகள்; பின்னால் இப்படி ஒரு மலிவான காரணம் இருக்கிறதா? -...

படங்களுக்கு தடை கோரி அதிகரிக்கும் வழக்குகள்; பின்னால் இப்படி ஒரு மலிவான காரணம் இருக்கிறதா? – கண்டித்த மதுரை நீதிமன்றம், கோலிவுட் கப்சிப்!

- Advertisement -

ஒரு திரைப்படம் உருவாகி வெளியாவதில் பல்வேறு சிக்கல்களும் சிரமங்களும் பொருளாதார நெருக்கடிகளும் இருக்கின்றன. நடிகர்கள் கால்ஷீட், படப்பிடிப்பு தளங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் விபத்துகள், படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடி, நடிக்க வராமல் முரண்டு பிடிக்கும் நடிகர், நடிகைகள் என பல விவகாரங்களை கடந்துதான் ஒரு படம் திரைக்கு வருகிறது.

இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு படம் உருவாகி ரிலீஸ் ஆகும் நேரத்தில், பழைய படங்களை தயாரித்த வகையில் கடன் பாக்கியை தராததால், படத்துக்கு தடை கோரி கோர்ட்டில் வழக்குகள் போடப்படுகின்றன. படத்தில் சர்ச்சையான காட்சிகள், வசனங்கள் இடம்பெறுவதாக கூறி படத்தை தடை செய்ய வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

- Advertisement -

சமீப காலமாக கோர்ட்டுகளில் உப்பு சப்பில்லாத காரணங்களுக்காக கூட இப்படிப்பட்ட வழக்குகள் அதிகளவில் தாக்கல் செய்யப்படுகின்றன. ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக வேண்டுமென்றே இது போன்ற அர்த்தமற்ற விஷயங்களுக்கு வழக்கு போடுகின்றனர்.

இதன் மூலம் பத்திரிகைகளில், ஊடகங்களில் அந்த படம் பற்றிய செய்திகளை இடம்பெற செய்து அதன் மூலம் விளம்பரம் தேடிக் கொள்வது நடைமுறையில் இருப்பதால் இதனை மதுரை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கறிஞர்கள் சிலர், ஆர்ஜே பாலாஜி நடித்த சொர்க்கவாசல் என்ற படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டதாக தெரிகிறது. அதனால் அவரை பின்பற்றுவோரை இந்த படம் அவமதிப்பதாக கருதப்படுகிறது. எனவே இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு அளித்தனர். இதற்கு பதில் அளித்த நீதிமன்றம், பல்வேறு பகுதிகளிலும் வெளியாகும் சினிமாவுக்கு மதுரையில் மட்டும் எப்படி தடை விதிக்க முடியும். சினிமாவுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்து சினிமாவை பிரபலப்படுத்துவது இப்போது வாடிக்கையாக்கிவிட்டது.

ஏராளமான பணத்தை செலவு செய்து தயாரிக்கும் சினிமாவுக்கு தடை கோரி வழக்கு தொடர்வது ஏற்புடையது அல்ல. இந்த கோரிக்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறியிருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த கண்டனம் தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலிவான விளம்பரத்திற்காக படங்களுக்கு தடை கூறும் வழக்குகள் அதிகரிப்பதை நீதிமன்றமே கண்டித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்