- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்போ சிரிக்கலேன்னா மண்டைய போட்டுடுவேன்னு என்னை மிரட்டினாங்க, நான் இப்பவும் நடிச்சிட்டுதான் இருக்கேன் - கிண்டலாக...

இப்போ சிரிக்கலேன்னா மண்டைய போட்டுடுவேன்னு என்னை மிரட்டினாங்க, நான் இப்பவும் நடிச்சிட்டுதான் இருக்கேன் – கிண்டலாக பேசிய நடிகர் சத்யராஜ்

- Advertisement -

தமிழ் சினிமாவில் வில்லனாக பல படங்களில் நடித்து பிறகு கதாநாயகனாக மாறியவர் நடிகர் சத்யராஜ். சினிமாவில் நடிக்க வந்த போதே விக்குடன் நடிக்க வந்த நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். ஆனாலும் ஹீரோயிசம் நிறைந்த படங்களில், ஆக்சன் படங்களில் நடித்து ரசிகர்களை அசத்தினார்.

சத்யராஜ் வில்லனாக அறிமுகமாகி நடித்த முதல் படம் சட்டம் என் கையில். இதில் கமல் ஹீரோவாக நடித்திருந்தார். பாரதிராஜா தான் சத்யராஜை கடலோர கவிதைகள் படம் மூலம் ஹீரோவாக மாற்றினார். பிறகு பிரம்மா ரிக்‌ஷா மாமா திருமதி பழனிசாமி தாய் மாமன் தெற்கு தெரு மச்சான் பிக்பாக்கெட் வேலை கிடைச்சிடுச்சு வாழ்க்கை சக்கரம் அமைதிப்படை நடிகன் என பல படங்களில் ஹீரோவாக நடித்து சத்யராஜ் முன்னணி நடிகராக மாறினார்.

- Advertisement -

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு ஹீரோ இமேஜ் குறைந்து போனதால் நடிகர் சத்யராஜ் குணச்சித்திர வேடத்துக்கு மாறினார். 2000ம் ஆண்டுகளில் வந்த ஹீரோ, ஹீரோயின்களுக்கு அப்பா அண்ணன் கேரக்டரிலும் போலீஸ் டாக்டர் அரசு அதிகாரி கேரக்டர்களிலும் நடிக்க ஆரம்பித்தார். பாகுபலி படத்தில் கட்டப்பா கேரக்டர் சத்யராஜூக்கு பெரிய புகழை பெற்றுத் தந்தது.

சத்யராஜ் மகன் சிபிராஜூம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். ஆனால் அவரால் ஒரு நடிகராக சத்யராஜ் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியவில்லை. எனினும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். சத்யராஜ் மனைவி மகேஸ்வரி 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

- Advertisement -

நடிகர் சத்யராஜ் கடவுள் மறுப்பாளர், பகுத்தறிவு சிந்தனைகளை பின்பற்றி பெரியார் வழி நடப்பவர் என்பது ரசிகர்கள் அறிந்ததுதான். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சத்யராஜ் கூறியதாவது, சினிமாவில் செத்துப் போகிற மாதிரியான காட்சியில் நடித்துவிட்டால், பிறகு கேமராவை பார்த்து சிரிக்க வேண்டும் என்ற ஒரு மூட நம்பிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

நான் நடித்த முதல் படம் சட்டம் என் கையில் படத்தில் கிளைமாக்ஸில் நான் இறந்து விடுவேன். என்னை கேமராவை பார்த்து சிரிக்க சொன்னாங்க. நான் மாட்டேன்னு சொல்லிட்டேன். இப்படி நீங்க சிரிக்கலேனா, மண்டைய போட்டுட்டா என்ன பண்றதுன்னு கேட்டாங்க. அது என் பிரச்னை. இது கடைசி நாள் ஷூட்டிங் தானே, விடு நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டேன். இப்பவும் நான் நல்லா தான் இருக்கேன், படங்களில் நடிச்சுட்டும் இருக்கேன் என்று பேசியிருக்கிறார். தன்னை அடையாப்படுத்திய தமிழ் சினிமாவையே சத்யராஜ் கலாய்ப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்