- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவின் 45 வது திரைப்படத்தில் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி நடித்தது தெரியும்... ஆனால் அவருக்கு...

சூர்யாவின் 45 வது திரைப்படத்தில் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி நடித்தது தெரியும்… ஆனால் அவருக்கு இப்படி ஒரு ரோல் இருக்கிறதா… இங்கதான் இருக்குது ட்விஸ்ட்…

- Advertisement -

சூர்யா தனது 44 வது திரைப்படத்திற்காக கார்த்திக் சுப்பராஜ் உடன் இணைந்தார். இதற்கு ரெட்ரோ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க காதல் திரைப்படம் ஆகவும் அதேசமயம் ஆக்சன் கலந்த காட்சிகளும் இந்த திரைப்படத்தில் இருப்பது அதன் டீசரை பார்க்கும்போதே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. காதலிக்காக அவர் எடுக்கும் முடிவுகளை மிக அழகாக டீசரில் காட்டி இருந்தார் இயக்குனர்.

ரெட்ரோ திரைப்படத்தின் டீசரின் மிகப்பெரிய பலமே சந்தோஷ் நாராயணனின் இசைதான். வெறும் ஒன்றரை நிமிடங்களே ஓடும் அந்த டீசரை சந்தோஷ் நாராயணனின் இசை உயிரோட்டம் உள்ளதாகியது. அனேகமாக இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இப்படியான சூழலில் தனது 45 வது திரைப்படத்தில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், அவர் ஆர் ஜே பாலாஜியின் கதையை டிக் செய்திருக்கிறார். இதுதான் இங்கு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் விஷயம். அப்படி என்ன கதையாக இருக்கும் என்று பலரும் தற்போது யோசனை செய்து வருகிறார்கள்.

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார். இதுபோக ரப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற சுவாசிகா, மலையாள நடிகர் இந்திரன், யோகி பாபு உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

முழுக்க முழுக்க நீதிமன்ற செட்டப்பிலேயே இந்த திரைப்படம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சூர்யாவுக்கு எதிர் தரப்பு வழக்கறிஞராக திரிஷா இருப்பதாகவும் கூறப்படுகிறது. கோயில் வழக்கு தொடர்பாகவே இதன் கதை நகரும் என்று தெரிகிறது. அதேசமயம் படம் ஃபேண்டஸி கலந்த ஜானரில் இருக்கும் என்றும் பலர் கூறுகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜியும் நடித்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில் அவருக்கு, வழக்கறிஞர் கதாபாத்திரம் என்றும் அவர் வில்லன் ரோலில் வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது எப்படி ஆர்ஜே பாலாஜி வில்லனாக இருக்க முடியும் என்று பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். அனேகமாக இன்னும் இரண்டு மாதங்களில் இதன் சூட்டிங் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்